மைக்ரோசாஃப்ட் ஊழியர்களுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா… குதூகலிக்கும் அறிவிப்பு வெளியிட்ட பில்கேட்ஸ்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுக்குச் சொந்தக்காரரான பில்கேட்ஸ் தரப்பில் இருந்து ஒரு திடுக்கிடும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதில் மைக்ரோசாஃப்ட் ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு விருப்பம் தெரிவித்தால் நிறுவனம் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் எனக் கூறப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பை கேட்ட அந்நிறுவனத்தின் ஊழியர் பலருக்கும் வியப்பே ஏற்பட்டு இருக்கும் என்பதில் கொஞ்சமும் சந்தேகமே இல்லை.
காரணம் கொரோனாவின் தாக்கம் இன்னும் எத்தனை நாளைக்கு இருக்குமோ எனத் தெரியாமல் இருக்கும் சூழலில் பலரும் வீட்டில் இருந்து பணியாற்றவே விரும்புகின்றனர். இந்நிலையில் உலகத்தின் பெரிய நிறுவனமான மைக்ரோசாஃப்ட் தானாக முன்வந்து ஊழியர்கள் விரும்பினால் நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்றலாம் எனத் தெரிவித்து இருக்கிறது.
இந்த அறிவிப்பு குறித்து அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட செய்தி குறிப்பில், “மைக்ரோசாஃப்ட் நிறுவன ஊழியர்கள் கொரோனா பரவல் காரணமாக வீட்டிலிருந்து பணி செய்வதையே நிரந்தரமாகத் தேர்ந்தெடுத்தால் அதற்கு நிறுவனம் அனுமதி அளிக்கிறது. அடுத்த ஜனவரி வரை நிறுவனத்தை திறக்க முடிவு செய்யப்படவில்லை என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது” என்று செய்தி வெளியிட்டு இருக்கின்றன.
மேலும் இந்தக் கொரோனா பரவல் நமக்கு கஷ்டமான காலகட்டத்தை உருவாக்கி உள்ளது என்றும் நாம் புதிய வழியில் நம் பணிகளைத் தொடர வேண்டும் என்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவ ஆரம்பித்த கொரோனா நோய்த்தொற்றால் இதுவரை 3 கோடியே 71 லட்சத்து 3 ஆயிரத்து 325 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழப்பு 10 லட்சத்து 73 ஆயிரத்தை தாண்டி விட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments