மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோயால் மரணம்
- IndiaGlitz, [Tuesday,October 16 2018]
உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான கம்ப்யூட்டர்கள் இயங்க காரணமான மைக்ரோசாப்ட் மென்பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் என்பவர் இன்று காலமானார். அவருக்கு வயது 65.
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் மட்டுமின்றி அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிலதிபர், தொண்டுப்பணி செய்பவர், பெரும் முதலீட்டாளர் என்ற் பெருமையை பெற்ற பால் ஆலன், கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் பாதிகப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அவர் சிகிச்சையின் பலனின்றி காலமானார்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் பால் ஆலன் இருவரும் இணைந்து கடந்த 1975ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கினர். இந்த நிறுவனம் கம்ப்யூட்டருக்கு தேவையான பல வகை மென்பொருட்களை தயாரிப்பது, மென்பொருள்களை மேம்படுத்துவது உள்பட பல்வேறு சேவைகளை செய்து வருகிறது.
பால் ஆலன் எழுதிய 'ஐடியாமேன்' என்ற புத்தகம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 100 மில்லியன் அமெரிக்க டாலரை ஆப்ரிக்க நாடுகளில் எபோலோ நோய் பரவல் தடுப்பு பிரிவிற்கு வழங்கிய கொடை வள்ளல் பால் ஆலன் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய மறைவு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு பேரிழப்பு என்று கூறப்படுகிறது.