செம குஷியில் ஊழியர்கள்… பேரிடர் காலத்தில் பெரும்தொகையை போனஸ் வழங்கும் நிறுவனம்!
- IndiaGlitz, [Friday,July 09 2021]
உலகின் மிகப்பெரிய சாஃப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம், உலகெங்கிலும் உள்ள தனது ஊழியர்களுக்கு தலா 1,500 அமெரிக்க டாலர்களை போனஸ் வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் அந்நிறுவன ஊழியர்கள் பலரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மைக்ரோசாஃப்ட் நிறுவன ஊழியர்கள் கொரோனா நேரத்தை திறமையாகச் சமாளித்து பணியாற்றியதால் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் இந்த ஊக்கத்தொகை 1.1 லட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மைக்ரோசாஃப்ட் வழங்கும் இந்த ஊக்கத்தொகையானது கார்பரேட் துணைத் தலைவர் பதவிக்கு கீழ் பணி செய்யும் 1,30,000 ஊழியர்களுக்கு கிடைக்கும் எனவும் இதனால் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை மைக்ரோசாஃப்ட் செலவிட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலரும் மகிழ்ச்சி கடலில் தத்தளித்து வருகின்றனர்.