அதிபர் பதவிக்கு தகுதியே இல்லாதவர்… ஒபாமா மனைவி மிச்செலின் காட்டமான குற்றச்சாட்டு!!!

  • IndiaGlitz, [Wednesday,August 19 2020]

 

அமெரிக்க அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் அதிபர் பதவிக்கான தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். நேற்று அமெரிக்காவில் தொடங்கப்பட்டு இருக்கும் ஜனநயாகக் கட்சி மாநாட்டில் இதற்கான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்பட்டது. அந்தக் கூட்டத்தொடரில் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செலும் கலந்து கொண்டார். அவரது உரையில் தற்போதைய அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் தகுதியே இல்லாதவர் எனக் கூறி கடும் பரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

வருகிற தேர்தலில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட இருக்கும் நிலையில் இத்தகைய கருத்து அவரது மதிப்பீட்டை குறைக்கும் விதத்தில் அமையுமோ என்ற அச்சமும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பல மாதங்களாக அமெரிக்காவில் நடத்தப்படும் அடுத்த அதிபர் யார் என்ற கருத்துக்கணிப்பில் தொடர்ந்து ஜோ பிடனே முன்னிலை வகித்து வருவதாகவும் ட்ரம்பின் செல்வாக்கு குறைந்து வருவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அதிபர் பதவிக்கு தகுதியே இல்லாத ஒருவர் அமெரிக்க அதிபராக இருக்கிறார் என ஒபாமாவின் மனைவி தெரிவித்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

மிச்செல் தன்னுடைய உரையில், “நமது நாட்டின் தவறான அதிபர் ட்ரம்ப், அவரது வேலையை அவர் நன்றாக செய்வார் என்று எதிர்பார்த்து அவருக்கு போதிய அவகாசத்தை நாம் வழங்கி விட்டோம். இனியும் தர முடியாது. அவர் இந்த பதவிக்கு பொருத்தமானவர் இல்லை என்பதை நிரூபித்து விட்டார். நாம் யார் வேண்டும் என்று எதிர்பார்த்தோமோ அவராக அவரால் செயல்பட முடியவில்லை. ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர் டிரம்ப். இந்த பதவியில் இருப்பவர்களுக்கு தெளிவான முடிவு, சிந்தனை வேண்டும். அது அவருக்கு இல்லை. அடிப்படை தேவைகளுக்கு மக்கள் திண்டாடி வருகின்றனர்.

வாக்காளர்கள் ஜோ பிடனுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்க வேண்டும். உங்களது தபால் வாக்குகளை வீணடித்து விடாதீர்கள். சரியாக பயன்படுத்துங்கள். நாட்டில் ஊழலை ஒழிக்க ஜோ பிடன்தான் சரியான தேர்வாக இருப்பார். நம்முடைய வாழ்க்கையை முடிவு செய்யக்கூடியது இந்த தேர்தல். நமது வாழ்க்கை இந்த தேர்தலை சார்ந்து இருக்கிறது என்று தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

2 ஆண்டுகள் நீட் தேர்வுக்கு தயாரான 19 வயது மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை: என்ன காரணம்?

கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு பயிற்சி மையத்தில் படித்து தயாராகி வந்த 19 வயது மாணவி திடீரென தற்கொலை செய்து கொண்டதால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திடீரென 'லவ்' டுவீட் பதிவு செய்த ஓவியா!

நடிகை ஓவியா கடந்த சில நாட்களாகவே தனது டுவிட்டர் பக்கத்தில் அதிரடியான சில கருத்துக்களை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.

அதிபர், பிரமர் கைது… நாடு முழுக்க வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு… மாலியில் நடக்கும் பரபரப்பு சம்பவங்கள்!!!

வடக்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் தற்போது இராணுவத்தின் ஆதிக்கம் அதிகரித்து இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது

குஷ்புவின் கண்ணில் ஏற்பட்ட திடீர் காயம்: வைரலாகும் புகைப்படம்

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு, சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் தனது கருத்துக்களை தைரியமாக தெரிவிப்பவர் என்ற பெயர் எடுத்தவர் என்பதும் தெரிந்ததே.

ஹர்திக் பாண்ட்யா மனைவி புகைப்படத்தை நீக்கிய இன்ஸ்டாகிராம்: என்ன காரணம்?

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் நடிகை நடாஷாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.