மிச்செல் ஒபாமா சொன்னது சரிதான்… முன்னணி நடிகையின் வைரல் ஸ்டேட்மெண்ட்!
- IndiaGlitz, [Tuesday,March 09 2021]
முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவின் கருத்தை எடுத்துக்காட்டி தமிழ் நடிகை ஒருவர் மகளிர் தினத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். இந்தக் கருத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவரின் நடிப்புத் திறமைக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கும் நிலையில் இவரின் மாலத்தீவு புகைப்படங்களும் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றன. அதோடு நேற்றைய தினம் கொண்டாடப்பட்ட மகளிர் தினத்தை முன்னிட்டு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இன்ஸ்டாவில் வாழ்த்துகளைத் தெரிவித்து உள்ளார்.
அதில் “மிச்செல் ஒபாமா சொன்னது போல், பெண்களாகிய நாம் எதைச் சாதிக்க முடியும் என்பதற்கு எல்லையே இல்லை. இங்குள்ள அனைத்து அற்புதமான பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள். நீங்கள் உலகை அற்புதமாக்குகிறீர்கள்” எனப் பதிவிட்டு உள்ளார். இந்த பதிவு பலருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பல நட்சத்திரப் பட்டாளங்களை அடுத்து தற்போது மாலத் தீவுக்கு படையெடுத்து இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அங்குள்ள கடற்கரையில் நின்றும், சூரிய ஒளியை ரசித்தும் பல புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.