மைக்கேல் மதன காமராஜன் பட நடிகர் காலமானார்.. இரங்கல் வீடியோ வெளியிட்ட காமெடி நடிகர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் நான்கு வேடங்களில் நடித்த ’மைக்கேல் மதன காமராஜன்’ என்ற திரைப்படத்தின் நடித்த காமெடி நடிகர் காலமானதை எடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவான ’மைக்கேல் மதன காமராஜன்’ என்ற திரைப்படம் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது,
கமல்ஹாசன் இந்த படத்தில் நான்கு வேடங்களில் நடித்திருக்கும் நிலையில் காமேஸ்வரன் என்ற கேரக்டரின் உதவியாளராக கோபிநாத் ராவ் என்பவர் வரதுக்குட்டி என்ற வேடத்தில் நடித்திருப்பார். இவர் இந்த படத்தில் காமெடியில் அசத்தியிருப்பார் என்பதும் காமேஸ்வரன் வரும் காட்சிகளில் எல்லாம் இவரது காமெடியும் சூப்பராக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கோபிநாத் ராவ் அவர்கள் தான் நேற்று காலமானார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த கிரேசி மோகனின் பல நாடகங்களில் கோபிநாத் ராவ் நடித்துள்ளதாக கிரேசி மோகன் சகோதரர் மது பாலாஜி வீடியோ ஒன்றை வெளியிட்டு அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த கோபிநாத் ராவ் நல்ல காமெடி சீன்ஸ் உள்ளவர் என்றும், அவர் எங்கள் டிராமா குரூப்பில் இருந்ததே எங்களுக்கு பெருமை என்றும், கடந்த சில நாட்களாக சர்க்கரை நோய் உள்ளிட்ட சில நோய்களால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று காலமானார் என்றும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
மேலும் காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சதீஷ் தனது சமூக வலைதளத்தில் கோபிநாத் ராவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments