என்ன மியா கலீஃபா இறந்துட்டாரா? வதந்திக்கு நெத்தியடி பதில் கொடுத்த மியா!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் ஆபாச பட அழகியும் தற்போதைய இன்ஸ்டாகிராம் பிரபலமுமான மியா கலீஃபா உயிரிழந்துவிட்டதாக இணையத்தில் தீயாய் செய்தி பரவியது. இதற்குப் பதில் அளித்துள்ள அவரின் மற்றொரு பதிவு கூடுதலாக இணையத்தில் வைரலாகி வருவகிறது.
இளைஞர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பு பெற்றவராக இருந்துவரும் மியா கலீஃபா சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாகவே செயல்பட்டுவருகிறார். இப்படியிருக்கும்போது கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை புதுப்பித்தார். மேலும் “எப்போதும நினைவில்“ எனப் பொருள்படும்படி Remembering என்ற வார்த்தையை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் இணைந்திருந்தார். இதனால் ஒருசிலர் அவரை ட்ரோல் செய்தனர். இன்னும் சிலர் அவர் இறந்துவிட்டதாக இணையத்தில் இரங்கலை வெளியிட்டு வந்தனர்.
இதைப்பார்த்த மியாவின் ரசிகர்கள் கவலை தெரிவித்து வந்த நிலையில் தனது இறப்பு செய்திக்கு பதிலளிக்கும் விதமாக மியா தற்போது இன்ஷ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அதாவது கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியான Monty python and the Holy grail எனும் திரைப்படத்தில் பிணத்தைப் புதைப்பதுபோல இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு “நான் இன்னும் இறக்கவில்லை, நான் நலமுடன் இருப்பதாய் உணர்கிறேன்“ எனத் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னாள் ஆபாசபட அழகியாகவும் தற்போது உலக அளவில் சோஷியல் மீடியா பிரபலமாகவும் இருந்துவரும் மியா கலீஃபா முன்பொரு முறை சிறுமிகள் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடவேண்டாம். ஒருமுறை இந்த கத்தியை எடுத்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் துரத்திக்கொண்டே இருக்கும் எனக் குறிப்பிட்டு இருந்தார். வெறுமனே சோஷியல் மீடியா பிரபலமாக மட்டுமே இல்லாமல் மியா தொடர்ந்து சமூகம் சார்ந்த விஷயங்களுக்குக் குரல் கொடுத்துவருவதால் ரசிகர்கள் மத்தியில் தனி மதிப்பை பெற்றிருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com