அழகு பற்றி கவலையா? முடங்கிக் கிடக்கும் பெண்களுக்கு பார்ன் ஸ்டார் மியா கலீஃபா அறிவுரை!
- IndiaGlitz, [Thursday,June 29 2023]
ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் உலக அளவில் பிரபலமான நடிகை மியா கலீஃபா தொடர்ந்து பல்வேறு பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அவர் நிறவெறியைக் குறித்தும் அதனால் ஏற்படும் தாக்கம் குறித்து பேசியுள்ள கருத்துகள் தற்போது உலக அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
முன்னாள் ஆபாச பட நடிகையான மியா கலீஃபா தனது 30 வயதிற்குப் பிறகு அதைவிட்டு விலகி ஃபேஷன் விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். அதோடு சமூகப் பொறுப்புணர்வுடன் அவ்வபோது கருத்துத் தெரிவித்தும் பிரச்சார நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்தும் வருகிறார். மேலும் பெண்கள் நலம் குறித்த விஷயங்களிலும் அக்கறை காட்டி வருகிறார்.
அந்த வகையில் தற்போது நிறவெறி குறித்தும் அதனால் பெண்கள் மனதளவில் பாதிக்கப்படுவது குறித்தும் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டதோடு அழகு மற்றும் நிறம் குறித்த கருத்துகளால் முடங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான பெண்களுக்கு தனது அறிவுரையை வழங்கியிருகிறார்.
சமீபத்தில் ஆக்ஸ்போர்ட் யூனியனில் பேசிய மியா கலீஃபா, நான் பல வருடங்களாக எனது நிறம் குறித்து மிகவும் அசௌகரியமாக உணர்ந்தேன். 8 வயதுவரை லெபனானில் வசித்தேன். பின்னர் அமெரிக்கன் டிசிக்கு குடும்பத்தோடு இடம்பெயர்ந்த நான் அங்குள்ள பள்ளிகளில் நிறம் குறித்து தாழ்மையாக உணர வைக்கப்பட்டேன். ஒல்லியான தோற்றம், பொன்னிறமான தோல் மற்றும் நீல நிற கண்களை வைத்துக்கொண்டு தாழ்வாக உணர்ந்தேன்.
ஒருகட்டத்தில் எனது தோற்றம் என்னை மிகவும் சங்கடப்படுத்தியது. ஒரு இளம் பெண்ணாக இதுபோன்ற விஷயங்களை சமரசம் செய்து கொள்வது கடினம். அதோடு நான் அதிக எடையுடன் இருந்ததால் லெபனான் பெண்களைப் போன்று அழகாகவும் தோற்றம் அளிக்கவில்லை. இதனால் பல்வேறு மன வேதனைக்கு ஆளாகி பின்னர் ஆபாச படங்களில் நடித்து வந்தேன். ஒருகட்டத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று விளங்காமல் அதைவிட்டு விலகி ஃபேஷனில் கவனம் செலுத்தினேன். இதுதான் என்னை உணர வைத்திருக்கிறது.
பெண்களுக்கு அவர்களின் நிறம் மற்றும் அழகு போன்றவை சுயமரியாதை தொடர்பான பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது. இளம் மனங்களில் அது அதிக தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதுபோன்ற விஷயங்களில் இருந்து விலகி ஆக்கப்பூர்வமாக என்னை மாற்றியது ஃபேஷன் மட்டுமே எனக் கூறியுள்ளார்.
மேலும், சொந்த தோலில் வசதியாக இல்லாத பெண்களுக்கு நான் ஒரு ஆலோசனையை வழங்க முடிந்தால் அது இதுதான். உங்களைச் சுற்றிப் பார்க்காதீர்கள். உங்கள் உள்ளே பாருங்கள். வாழ்வதற்கு உங்களின் சொந்த சட்டங்களை உருவாக்கி எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் நேர்மைக்கு முன்னுரிமை கொடுங்கள்.
அழகான பெண்கள் நிறைந்த ஒரு அறையில் உங்களை தனித்துவமாக்குவதை யாராலும் செய்ய முடியாது என்ற உண்மையிலிருந்து உங்கள் நம்பிக்கையை எடுத்துக்கொள்ளுங்கள். உன்னைப்போல் யாராலும் நேசிக்க முடியாது. உன்னை போல் வாழைப்பழத்தை யாராலும் சுட முடியாது. உன்னைப் போன்ற ஒரு கதையை யாரும் ஆர்வத்துட்ன் கேட்க முடியாது. நீங்கள் செய்யும் விதத்தில் அவர்கள் நம்புவதை யாராலும் அசைக்காமல் நிற்க முடியாது. தன்னம்பிக்கை எங்கிருந்து வருகிறது… வயது மற்றும் காலத்தால் மங்காது… மாறாத வலுவடையும்… என்று அறிவுரை கூறியுள்ளார்.
உலக அளவில் நிறம் குறித்த எண்ணங்களும் சிந்தனைகளும் இன்றைக்கு பல்வேறு சிக்கலை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் பெண்கள் தங்களது தோலின் நிறத்தால் தாழ்வு மனப்பான்மைக்குள் சிக்கக்கூடாது என மியா கலீஃபா கூறியுள்ள இந்தக் கருத்துக்கள் அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
ஃபேஷன் ஸ்டார், சோஷியல் மீடியா பிரபலம் என்று உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ள இவருக்கு இன்ஸ்டாவில் மட்டும் 27 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். இந்நிலையில் பெண்களின் நிறம் குறித்து பேசியுள்ள இவரது கருத்து உலக அளவில் கவனிக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வருகிறது.