2-ஆவது கணவருடன் மியா கலிஃபா விவாகரத்து .....! நண்பர்களாக இருக்க முடிவு...!
- IndiaGlitz, [Monday,July 26 2021]
கவர்ச்சி நடிகை மியா கலிஃபா தனது இரண்டாவது கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.
ஆபாச படங்களில் நடித்து குறுகிய காலத்தில் பிரபலமானவர் தான் மியா கலீபா. 28 வயதே நிரம்பிய இணைய பிரபலம், ஆபாச பட நடிகையான மியா அமெரிக்கவைச்சேர்ந்தவர். இவர் கத்தோலிக மதத்தை சார்ந்தவராக இருந்தாலும், அதை பின்பற்றவில்லை. கடந்த 2011- ஆம் ஆண்டு, தன்னுடைய 18 வயதில், பள்ளிக் காதலனான அமெரிக்கர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதன் பின் 2014-ஆம் ஆண்டு தனது 22 வயதில் ஆபாச படங்களில் தோன்ற ஆரம்பித்தார். இவர் நடித்தது குறிப்பிட்ட ஒரு சில மாதங்கள் என்றாலும், ஆபாச இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட நபராக இருந்தார். மியாவின் காணொளிகள் 15 லட்சம் பார்வையாளர்களால் குறுகிய காலங்களில் பார்க்கப்பட்டது. இதையடுத்து கருத்துவேறுபாடு இருவரும் 2016- ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள். இவர் தற்போது யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
சென்ற 2019-ல் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர் என்பவருடன், தனக்கு திருமணம் நடக்கவிருப்பதாகவும், நிச்சயம் முடிந்துள்ளதாகவும் அறிவித்திருந்தார். கொரோனா காரணத்தால் கல்யாண ஏற்பாடுகள் தள்ளிப்போக, வீட்டிலேயே எளிமையான முறையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையின் அவ்வப்போது சண்டைகள் வந்துள்ளது. தம்பதிகளுக்கு மத்தியில் விரிசல்கள் வருவது இயல்பான ஒன்றுதான். ஆனால் அவரை விவாகரத்து செய்வதாக மியா தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது,
எங்களுடைய திருமண உறவை தக்க வைத்துக்கொள்ள கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக, நாங்கள் முயற்சிகள் எடுத்து வந்தோம். ஆனால் அது பலனளிக்காத காரணத்தால், திருமண பந்தத்தை முறிக்க முடிவெடுத்துள்ளோம். இந்த உறவில் இருந்து பிரிந்தாலும், நாங்கள் நட்பாக பயணத்தை தொடர முடிவு செய்துள்ளோம். இதனால் இருவருக்கும் மன வருத்தம் இல்லை. எங்கள் வாழ்க்கையை வெவ்வேறு திசையில் பயணிக்க முடிவெடுத்துள்ளோம். விவாகரத்து பெரும் எங்களுக்கு வருத்தம் தெரிவிக்காதீர்கள், வாழ்த்து தெரிவியுங்கள் என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.