ஐபிஎல் 2019: மொத்த பரிசுத்தொகை ரூ.50 கோடி, யார் யாருக்கு எவ்வளவு?

கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நேற்றிரவுடன் முடிவுக்கு வந்தது. இறுதி போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய நிலையில் மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த நிலையில் வெற்றி பெற்ற மும்பை அணிக்கு ரூ.20 கோடியும் வெற்றிக்கோப்பையும், தோல்வி அடைந்த சென்னை அணிக்கு ரூ.12.5 கோடியும் பரிசுகள் வழங்கப்பட்டது.

அதேபோல் மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பிடித்த டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு முறையே ரூ.10.5 கோடி மற்றும் ரூ. 8.5 கோடி வழங்கப்பட்டது.

இறுதி போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற பும்ராவுக்கு 5 லட்சமும், தொடர் நாயகன் ரஸலுக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்பட்டது.

இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த டேவிட் வார்னருக்கு ரூ.10 லட்சமும், அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய இம்ரான் தாஹிருக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்பட்டது.

மேலும் எமரஜிங் பிளேயர் கில், சூப்பர் ஸ்ட்ரைக்கர் ரஸல், சிறந்த கேட்ச் பிடித்த பொல்லார்டு, ஸ்டைலிஷ் வீரர் கே.எல்.ராகுல், கேம் சேஞ்ச் பிளேயர் ராகுல் சஹார், அதிவேகம் அரைசதம் அடித்த ஹர்திக் பாண்ட்யா ஆகியோர்களுக்கும் தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது

மொத்தத்தில் இந்த ஐபிஎல் தொடரில் சுமார் ரூ.50 கோடி அளவில் பரிசுகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது

Images Courtesy: IPLT20 BCCI