மத்திய அரசின் அதிரடி உத்தரவால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிம்மதி
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரங்கில் பெரும் பிரச்சனையாக இருப்பது வெளி மாநிலங்களில் இருந்து வேலை நிமித்தமாக புலம்பெயர்ந்து இருக்கும் தொழிலாளர்கள் தான். சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சிக்கலில் இருக்கும் இவர்களை பாதுகாப்பது பல மாநிலங்களுக்கு ஒரு பெரிய விஷயமாக உள்ளது. மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் அவ்வபோது நடத்திய போராட்டத்தால் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.
இந்த நிலையில் வெளிமாநிலத் தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் சற்றுமுன் தெரிவித்துள்ளது. இதனால் ஊரடங்கால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் படித்து வந்த மாணவர்கள், சுற்றுலாப்பயணிகளும் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப அனுமதி தரப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் சொந்த மாநிலங்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கான பணிகளை மேற்கொள்ள தனி குழுவை நியமிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
MHA allows movement of stranded migrant workers and students.
— Arvind Gunasekar (@arvindgunasekar) April 29, 2020
Moving persons to be screened and asymptomatic would be allowed: MHA pic.twitter.com/8oHrHRFy5i
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments