உயிரைக் காப்பாற்ற பெரும் முயற்சி எடுத்த எம்.ஜி.ஆர், சிங்கப்பூரிலிருந்து வந்த மருந்து....
- IndiaGlitz, [Tuesday,August 27 2024]
மறைந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன் குறித்து அவரது மனைவி திருமதி முத்துலட்சுமி Indiaglitz க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது;
அவர் எப்போதும் சூடான உணவுகளை விரும்புவதில்லை. பெரும்பாலும், குளிர்ச்சியான உணவையே எடுத்துக்கொள்வார். அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம்.
வயிற்றில் புண் இருந்தது. அதன்பிறகே தெரியவந்தது அவருக்கு மூலம் இருந்ததும். தொடர்ந்து மருத்துவமனையில் அவர் சிகிச்சையில் இருந்தார்.
அப்போது பத்திரிகைகள் எல்லாம் அவர் குடித்து குடித்து உடலை கெடுத்துக்கொண்டார் என்று தவறான செய்திகளை வெளியிட்டது. நான் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.
அந்த சமயத்தில்தான் அவருக்கு ஒரு மருந்து தேவைப்பட்டது . அது இந்தியாவில் இல்லை, அதனை அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் ஆணைப்படி சிங்கப்பூரிலிருந்து கொண்டு வரப்பட்டது. அந்த மருந்து கொடுக்கும்போதே அவர் உயிர் பிரிந்துவிட்டது.
சில நாட்கள் கழித்து, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், மஞ்சள் காமாலையில்தான் நடிகர் சுருளிராஜன் காலமானார் என்ற தகவலைச் சொன்னார். சிலருக்கு அந்த நோய் இருப்பதே தெரியாமல்
இருந்துவிடுவார்கள், என்றும் அவர் சொன்னார். அதன்பின்தான் எனக்கு புரிந்தது,அவர் மஞ்சள் காமாலை நோயினால்தான் இறந்தார் என்பது. ஏனெனில் அந்த கால கட்டத்தில் எனக்கு பெரிதாக எதுவும் புரியவில்லை.
என் கணவர் குடிப் பழக்கத்தால் இறந்தார் என்று இப்போது பேசுவது தேவையில்லாதது.
அவர் இறந்தது சுமார் 15 ஆண்டு கழித்து சோமநாதன் என்ற சினிமா பட தயாரிப்பாளர் வந்து உங்கள் கணவருக்கு நான் சம்பளம் தர வேண்டியுளளது என்று சொல்லி 2500 ரூபாயை தந்து சென்றார். செத்தும் கொடுத்தான் சீதக்காதி.
இந்த கால நகைச்சுவையில் எனக்கு வடிவேலுவை மிகவும் பிடிக்கும். நினைத்தவுடன் சிரிப்பு வரும் என மறைந்த நடிகர் சுருளிராஜன் மனைவி தன் நினைவலைகளை Indiaglitz நேயர்களோடு பகிர்ந்துகொண்டுள்ளார்.