மீண்டும் வைரலாகும் எம்ஜிஆர்-விஜய் போஸ்டர்: இந்த முறை கள்ளக்குறிச்சி ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
எம்ஜிஆருடன் விஜய்யை ஒப்பிட்டு போஸ்டர் அடிக்கும் கலாச்சாரத்தை மதுரை விஜய் ரசிகர்கள் ஆரம்பித்து வைத்த நிலையில் தற்போது இந்த ஜுரம் தமிழகம் முழுவதும் பரவிவிட்டது. ஏற்கனவே சென்னை காஞ்சிபுரத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் எம்ஜிஆரின் விதவிதமான பழைய திரைப்பட போஸ்டர்களில் விஜய்யை உருவகப்படுத்தி ஒட்டிய போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இதற்கு எம்ஜிஆரின் ரசிகர்கள் மற்றும் அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஒருசில அமைச்சர்கள் கூட தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி விஜய் ரசிகர்கள் ஒட்டிய புதிய போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த வாத்தியார் (எம்ஜிஆர்) ஆண்டது முடிஞ்சது தலைவா
இனி எங்க வாத்தியார் (விஜய்) நீதான் புறப்பட்டு வா தலைவா
அன்று வாத்தியாராய் ஆட்சி செய்தார் எம்ஜிஆர்
இன்று எங்கள் அண்ணனாய் ஆட்சி செய்ய வா தலைவா
தலைவா நீ அழைத்தால் கூடுவது மாநாடு அல்ல தமிழ்நாடு
மேற்கண்ட வாசகங்களுடன் கூடிய போஸ்டர் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் எம்ஜிஆர் போலவே கையை உயர்த்தி காட்டும் விஜய்யின் போஸ்டரும் அதற்கு பின்னால் தமிழக அரசின் தலைமைச் செயலகமும் உள்ள இந்த போஸ்டர் தற்போது இணைய தளங்களிலும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments