மீண்டும் வைரலாகும் எம்ஜிஆர்-விஜய் போஸ்டர்: இந்த முறை கள்ளக்குறிச்சி ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Tuesday,September 08 2020]

எம்ஜிஆருடன் விஜய்யை ஒப்பிட்டு போஸ்டர் அடிக்கும் கலாச்சாரத்தை மதுரை விஜய் ரசிகர்கள் ஆரம்பித்து வைத்த நிலையில் தற்போது இந்த ஜுரம் தமிழகம் முழுவதும் பரவிவிட்டது. ஏற்கனவே சென்னை காஞ்சிபுரத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் எம்ஜிஆரின் விதவிதமான பழைய திரைப்பட போஸ்டர்களில் விஜய்யை உருவகப்படுத்தி ஒட்டிய போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இதற்கு எம்ஜிஆரின் ரசிகர்கள் மற்றும் அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஒருசில அமைச்சர்கள் கூட தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி விஜய் ரசிகர்கள் ஒட்டிய புதிய போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த வாத்தியார் (எம்ஜிஆர்) ஆண்டது முடிஞ்சது தலைவா 
இனி எங்க வாத்தியார் (விஜய்) நீதான் புறப்பட்டு வா தலைவா 

அன்று வாத்தியாராய் ஆட்சி செய்தார் எம்ஜிஆர் 
இன்று எங்கள் அண்ணனாய் ஆட்சி செய்ய வா தலைவா 

தலைவா நீ அழைத்தால் கூடுவது மாநாடு அல்ல தமிழ்நாடு 

மேற்கண்ட வாசகங்களுடன் கூடிய போஸ்டர் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் எம்ஜிஆர் போலவே கையை உயர்த்தி காட்டும் விஜய்யின் போஸ்டரும் அதற்கு பின்னால் தமிழக அரசின் தலைமைச் செயலகமும் உள்ள இந்த போஸ்டர் தற்போது இணைய தளங்களிலும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

14 வருடங்களுக்கு முன் வெளியான சூர்யா பட பாடலை பாடிய 'சூரரைப்போற்று' நாயகி!

14 வருடங்களுக்கு முன் வெளியான சூர்யா படத்தின் பாடலை சூர்யாவின் 'சூரரைப்போற்று' படத்தின் நாயகி பாடியுள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

வாங்கிய லோன் 51 லட்சம், கட்டிய தொகை 94 லட்சம், ஆனால் மீதியிருக்கும் கடன் 37 லட்சம்: வங்கி லோன் குறித்த அதிர்ச்சி  தகவல்

டாக்டர் ஒருவர் வீடு வாங்குவதற்காக வங்கியில் ரூ.51 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அவர் 2006ஆம் ஆண்டு வாங்கிய இந்த கடனில் கடந்த 14 ஆண்டுகளில் 94 லட்சம் கடனை திருப்பி கட்டியுள்ளார்.

இந்தி பட வாய்ப்பு வந்தால் டீசர்ட்டை கழட்டிவிடுவார்கள்: பிக்பாஸ் நடிகை

கடந்த சில நாட்களாக இந்தி மொழிக்கு எதிரான டீசர்ட்டுகளை அணிந்து திரையுலகினர் சிலர் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை ஸ்தம்பித்து வருகின்றனர்

நடிகர் கொட்டாச்சி இயக்கும் திரைப்படம்: உதவி செய்யும் அருண்விஜய்!

தளபதி விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு சிறு கேரக்டரில் நகைச்சுவை வேடத்தில் நடித்து வந்தவர் நடிகர் கொட்டாச்சி. இவருடைய மகள் மானஸ்வி குழந்தை

ஐபிஎல் திருவிழா: ஸ்பெஷல் டிரைலர்: மும்பை இந்தியன்ஸ்

ஐந்தாவது முறையாகப் பட்டையைக் கிளப்புமா டான் ரோஹித்தின் மும்பை! ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கில்லி அணியாகக் கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ்