ரூ.160 கோடி பட்ஜெட்டில் உருவாகும் எம்.ஜி.ஆர் படம்
- IndiaGlitz, [Wednesday,September 19 2018]
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிப்பதாக இருந்த 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' திரைப்படம் தற்போது அனிமேஷனில் தயாராகி வருகிறது என்பது தெரிந்ததே. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் மேலும் ஒரு எம்.ஜி.ஆர். அனிமேஷன் படத்தை தயாரிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. 22 மில்லியன் அமெரிக்க டாலரில் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 160 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படத்தை மலேசிய நிறுவனம் ஒன்று தயாரிக்க இந்த படத்தை பிரபல இயக்குனர் பி.வாசு இயக்கவுள்ளார்.
இந்த படத்திற்காக எம்ஜிஆரின் 5000 புகைப்படங்கள் ஆய்வு செய்யப்பட்டு அவருடைய முகம் மற்றும் உணர்வுகளை அனிமேஷனில் கொண்டு வர திட்டமிடப்பட்டு வருகிறது. பிரபல ஹாலிவுட் நடிகர் பால்வாக்கர் விபத்தில் மறைந்தபின்னர் அவர் நடித்த கொண்டிருந்த 'பாஸ்ட் அண்ட் பியூரி 7' படத்தை N-Face டெக்னாலஜி மூலம் அந்த படத்தை படக்குழுவினர் முடித்தனர். அதே டெக்னாலஜியில் இந்த எம்.ஜி.ஆர் படமும் உருவாகவுள்ளதாக மலேசியன் நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ், ஆங்கிலம், மலாய் உள்பட பல மொழிகளில் உருவாகும் இந்த படம் மக்கள் திலகம் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.