close
Choose your channels

ஓபிஎஸ்-க்கு எம்.ஜி,.ஆர் உறவினர் ஆதரவு.

Saturday, December 24, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு எம்.ஜி.ஆர் மற்றும் அவரது மனைவி ஜானகி எம்.ஜி.ஆரின் உறவினர்கள் இன்று எம்.ஜி.,ஆர் சமாதியில் அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் நிருபர்களுக்கு அவர்கள் பேட்டியளித்தபோது ஜெயலலிதாவுக்கு எப்படி ஜானகி பெருந்தன்மையுடன் விட்டு கொடுத்தாரோ, அதேபோல் ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்ட ஓபிஎஸ்-க்கு அனைவரும் ஒத்துழைப்பு தந்து ஆதரவு தர வேண்டும் என்று கூறினர்.

இதுகுறித்து ஜானகி எம்ஜிஆரின் உறவினர் சுதா விஜயகுமார் கூறியபோது, 'எம்.ஜி.ஆர் இறந்தவுடன் யார் தலைமை பொறுப்பை ஏற்பது என்று ஜெயலலிதா, ஜானகி ஆகிய இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அப்போது அதிமுகவின் இரட்டை இலை முடக்கப்பட்டது. அதன் பின்னர் சோ அவர்கள் தலையிட்டு ஜெயலலிதா கட்சியை வழிநடத்தட்டும் என்று கூறிய பின்னர் தான் மீண்டும் இரட்டை இலை அதிமுகவுக்கு கிடைத்தது.

எம்.ஜி.ஆருக்கு பின்னர் ஜெயலலிதாவுக்கு எப்படி அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தார்களோ அதேபோல் ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்ட ஓபிஎஸ்-க்கு அதிமுகவினர் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும். ஓபிஎஸ் தற்போது நல்ல முறையில் ஆட்சி செய்து வருகிறார். இந்த நல்லாட்சி தொடர்ந்தால் அடுத்த தேர்தலிலும் அதிமுகவே ஆட்சிக்கு வரும். அதிமுக பொதுச்செயலாளரை பொறுத்தவரை கட்சியினர் யாரை ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்களே வழிநடத்தலாம்' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment