கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டிபிடிப்பதில் முதல்கட்ட வெற்றி: தமிழகம் சாதனை
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸை ஒழிக்க இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும், இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் மருத்துவர்கள் தீவிர முயற்சியில் உள்ளனர் என்பதும், இதற்காக மில்லியன்கணக்கான டாலர்கள் செலவு செய்யப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முதல் கட்ட வெற்றி கிடைத்துள்ளதாக எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷைய்யன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
அவர் இதுகுறித்து மேலும் கூறியபோது, ‘கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி கிடைத்துள்ளதாகவும் இதனால் விரைவில் கொரோன தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ரிவர்ஸ் வேக்ஸினாலஜி என்ற முறையில் கொரோனா வைரஸை தடுக்கும் புரதம் கண்டுபிடிக்கபப்ட்டுள்ளதாகவும் இதனையடுத்து அமெரிக்காவின் தடுப்பு மருந்து நிறுவனத்தோடு இணைந்து அடுத்தகட்ட ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாகவும் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷைய்யன் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முதல்கட்ட வெற்றி அடைந்துள்ள செய்தி அனைவருக்கும் நம்பிக்கை தரும் வகையில் உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments