எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Friday,September 11 2020]

உலகம் முழுவதும் கடந்த 5 மாதங்களாக மிகவும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் தற்போது தலைவிரித்தாடுகிறது. நேற்று ஒரே நாளில் இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழகத்திலும் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் தமிழகத்தில் கொரோனாவால் பொதுமக்கள் மட்டுமின்றி எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ஆகியோர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் இதில் கொரோனாவுக்கு ஒரு எம்பி மற்றும் ஒரு எம்எல்ஏ பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பல விஐபிக்களை தாக்கி வரும் கொரோனா வைரஸ் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் அண்ணன் மகன் எம்.ஜி.சி சந்திரன் அவர்களின் உயிரையும் பலி வாங்கியுள்ளது. எம்ஜிஆரின் அண்ணன் மகன் எம்.ஜி.சி சந்திரன் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எம்ஜிஆரின் அண்ணன் மகன் கொரோனாவுக்கு பலியானதால் எம்ஜிஆரின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்

More News

தூற்றலே போற்றலுக்கு வழிவகுக்கிறது… விமர்சனங்களுக்கு கடும் பதிலடி கொடுத்த தமிழக முதல்வர்!!!

கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில் விமர்சனங்களே

ஐபிஎல் திருவிழா : ஸ்பெஷல் டிரைலர் நினைவாகுமா கிங் கோலியின் கனவு?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளில் அதிக நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றுள்ள அணி ராயல் சாலஞ்சர்ஸ்

நான் தினமும் கோமியம் குடிக்கின்றேன்: அக்சயகுமார் அதிர்ச்சி தகவல்

பிரபல பாலிவுட் நடிகர் அக்சயகுமார் தன்னுடைய ஆரோக்கியத்திற்காக தினந்தோறும் கோமியம் குடிப்பதாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தன் உயிரைத் தியாகம் செய்து எஜமானைக் காப்பாற்றிய செல்லப்பிராணி… நெகிழ்ச்சி சம்பவம்!!!

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியைக் கடித்து தன்னுடைய எஜமானருக்கு எச்சரித்து செய்திருக்கிறது ஒரு நாய்.

மாட்டுக் கோமியத்தில் சானிடைசரா??? பரபரப்பு ஏற்படுத்தும் புதிய தகவல்!!!

மாட்டுக் கோமியம் மற்றும் சாணம் கிருமிநாசினி தன்மைக் கொண்டது என்ற நம்பிக்கை ஒருசிலரிடம் வலுவாக இருந்து வருகிறது.