ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எம்ஜிஆர் அண்ணன் மகன் போட்டி

  • IndiaGlitz, [Monday,December 04 2017]

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், பாஜக சார்பில் கரு நாகராஜன், நாம் தமிழர் சார்பில் கலைக்கோட்டுதயம் ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர். மேலும் டிடிவி தினகரன், தீபா உள்பட  பல சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று சுயேட்சை வேட்பாளராக நடிகர் விஷால் வேட்புமனுதாக்கல் செய்யவுள்ளார். அவர் இன்று மதியம் 12.30 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விஷால் வேட்புமனுதாக்கல் செய்யும் அதே 12.30 மணிக்கு புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் ரத்த வாரிசும் எம்ஜிஆர் அவர்களின் அண்ணன் திரு.சக்கரபாணி அவர்களின் மகனுமான திரு.M .C.சந்திரசேகர் என்ற M.G.C.சந்திரன் ஆர்.கே நகர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியில் எம்ஜிஆரின் குடும்ப வாரிசு ஒருவரே களத்தில் இறங்குவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

வேலைக்காரன்' ஆடியோ விழாவில் சிவகார்த்திகேயன் எடுத்த முக்கிய முடிவு

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவான வேலைக்காரன்' திரைப்படத்தின் ஆடியோ விழா நேற்ரு சென்னையில் நடந்தது.

சுசி கணேசன் 'திருட்டுப்பயலே 2' ஓப்பனிங் வசூல் விபரம்

சுசீந்திரன் இயக்கிய 'திருட்டுப்பயலே' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அதன் அடுத்த பாகமான 'திருட்டுப்பயலே 2' திரைப்படம் கடந்த மாதம் 30ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது.

சன்னிலியோன் நாயகியாக நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம்

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் இதற்கு முன்னர் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த 'வடகறி' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்த நிலையில் தற்போது ஒரு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மனுதாக்கலுக்கு முன் விஷால் செய்ய போகும் மரியாதை

நடிகர் சங்க செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

விஷால் என்ன ரஜினியா? பொங்கிய தமிழருவி மணியன்

ஒருபக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போர் வரட்டும் என்று அரசியலுக்கு வருவதாக பல வருடங்களாக கூறி வருகிறார். இன்னொரு பக்கம் உலக நாயகன் கமல்ஹாசன் தான் அரசியலுக்கு வந்துவிட்டதாகவே கூறி வருகிறார்.