ட்ரிம் செய்யப்பட்ட 18 நிமிடங்களை சேர்த்து பார்க்கலாம்.. 'மெய்யழகன்' ஓடிடி ரிலீஸ் தேதி..!

  • IndiaGlitz, [Tuesday,October 22 2024]

கார்த்தி நடித்த ‘மெய்யழகன்’ திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன சில நாட்களில், 18 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஓடிடியில் ட்ரிம் செய்யப்பட்ட காட்சிகளையும் சேர்த்து பார்க்கலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

கார்த்தி நடிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் உருவான ‘மெய்யழகன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. கார்த்தி மற்றும் அரவிந்த்சாமியின் உரையாடல் இந்த படத்தில் ஹைலைட்டாக இருந்தது.

இருப்பினும் இந்த படம் ரிலீஸ் ஆகும்போது படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக விமர்சகர்கள் தெரிவித்த நிலையில், சில நாட்களில் 18 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்டு ரன்னிங் டைம் குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது ‘மெய்யழகன்’ திரைப்படம் வரும் 27 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திரையரங்கில் ட்ரிம் செய்யப்பட்ட 18 நிமிட காட்சிகளை சேர்த்து, ஓடிடியில் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி திருநாளில், குடும்பத்துடன் பார்த்து மகிழக் கூடிய தரமான படம் என்று கூறப்படுகிறது.

More News

கனவு நனவாகிவிட்டது.. ரசிகர்களுக்கு நல்ல செய்தி சொன்ன ஷாலின் ஜோயா..

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனை நடிகை ஷாலின் ஜோயா காதலிப்பதாக கூறப்படும் நிலையில், சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நல்ல செய்தி பகிர்ந்ததையடுத்து, அவருக்கு ரசிகர்கள்

டீல் கேன்சல் என அறிவித்த ஆஜே ஆனந்தி.. எங்களால் வாக்கை காப்பாத்த முடியாது: முத்துகுமார் பதிலடி.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் சண்டை போட்டுக் கொள்வதும், சனி ஞாயிறு அன்று தொகுப்பாளர் விஜய் சேதுபதி அந்த சண்டை குறித்து விசாரணை செய்து வருவதும்

சிவகார்த்திகேயனின் 'அமரன்' டிரைலர் எப்போது.. ராஜ்கமல் நிறுவனம் அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

தவெக தலைவர் விஜய் வெளியிட்ட இரங்கல் செய்தி.. என்ன ஆச்சு?

தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகியான திரு. சரவணன் திடீரென உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த செய்தி  அக்கட்சியின் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் இணைந்த 2 பிரபலங்கள்.. அதில் ஒருவர் பிக்பாஸ் பிரபலம்..!

ஜெயம் ரவியின் அடுத்த படத்தை 'டாடா' இயக்குனர் கணேஷ்பாபு இயக்க இருக்கும் நிலையில், இந்த படத்தில் 2 பிரபலங்கள் இணைய உள்ளதாகவும், அதில் ஒருவர் பிக்பாஸ் பிரபலம் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.