close
Choose your channels

இன்று முதல் ட்ரிம் செய்யப்பட்டது 'மெய்யழகன்'.. எத்தனை நிமிடங்கள் தெரியுமா?

Monday, September 30, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடித்த 'மெய்யழகன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் ரன்னிங் டைம் இன்று முதல் 18 நிமிடங்கள் குறைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்த ’96’ என்ற படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் உருவான அடுத்த படம் 'மெய்யழகன். கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி முக்கிய கேரக்டர்களில் நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது; இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி பல திரையுலக பிரமுகர்கள் பார்த்து பட குழுவினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில், 'மெய்யழகன்’ படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 57 நிமிடங்கள் என்ற நிலையில், படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக சிலர் விமர்சனங்களில் தெரிவித்திருந்தனர். தற்போது, படம் வெளியான சில நாட்களுக்கு பிறகு, 18 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்டு, இன்று முதல் குறைக்கப்பட்ட நீளத்துடன் 'மெய்யழகன்’திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ட்ரிம் செய்யப்பட்ட பிறகு, 'மெய்யழகன்’திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மேலும் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment