தலைமுடிக்குப் பதிலாகத் தங்கச்சங்கிலி? ராப் பாடகரைப் பார்த்து வியந்த நெட்டிசன்ஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மெக்சிகோவை சேர்ந்த ராப் பாடகர் ஒருவர் தன்னை வித்தியாசமாகக் காட்டிக் கொள்ள நினைத்து புது முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். இதற்காக அவர் தலையில் இருந்த தலைமுடியை அகற்றிவிட்டு அறுவைசிகிச்சை மூலம் தங்கச் சங்கிலிகளை தலைமுடிகளாக மாட்டிவிட்டார். அதோடு தனது பற்கள் முழுவதையும் தங்கப் பற்களாகவே மாற்றிவிட்டார்.
23 வயதான ராப் பாடகர் டன் சூப் செய்த காரியம்தான் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தங்கத்தின்மேல் அதிக மோகம் கொண்ட இவர் தலைமுடிக்குப் பதிலாக அறுவை சிகிச்சை செய்து தங்கச்சங்கிலிகளை தலைமுடியைப் போல தனது தலையில் மாட்டிவிட்டார். இதனால் பார்ப்பதற்கே வித்தியாசமாகக் காட்சி அளிக்கும் இவர் தன்னைப் போல வேறு யாரும் இந்த முயற்சியை செய்திருக்க மாட்டார்கள்? என்று தன்னைத்தானே கிண்டலடித்து கொண்டிருக்கிறார்.
இதைத்தவிர டன் சூப் தன்னுடைய ஒட்டுமொத்தப் பற்களையும் அகற்றிவிட்டு அறுவை சிகிச்சையின் மூலம் தங்கப் பற்களை அந்த இடத்தில் பொருத்திவிட்டார். இதனால் பார்ப்பதற்கே டன் சூப் ஒரு அசையும் தங்க மாளிகைப் போலவே காட்சி அளிக்கிறார். சோஷியல் மீடியாவில் அதிகக் கவனம் பெற்ற டான் சூப் புகைப்படங்கள் தற்போது படு வைரலாகி வருகின்றன.
காரணம் ஒரு சிறிய துண்டு தங்கத்தை வாங்குவதற்கே வருடக்கணக்கில் உழைக்க வேண்டி இருக்கிறது. ஆனால் இந்த ராப் பாடகர் அசால்ட்டாக தனது தலைமுடி, பற்கள் என அனைத்தையும் தங்கத்தைக் கொண்டு அலங்கரித்துள்ளார். இதனால் சோஷியல் மீடியாவில் அதிக வரவேற்பை பெற்ற ராப் பாடகர் டன் சூப்பின் புகைப்படங்கள் தற்போது நெட்டிசன்களிடம் பொறாமையை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout