மனைவி மூளையைச் சமைத்துச் சாப்பிட்ட கணவர்? கொடூரத்தின் உச்சக்கட்டம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மெக்சிகோவில் வசித்துவரும் கட்டிடத் தொழிலாளி ஒருவர் தன்னுடைய சொந்த மனைவியின் மூளையை சமைத்து டாகோஸில் வைத்து சாப்பிட்டதாக ஒப்புக்கொண்டிருக்கும் தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவிலுள்ள பியூப்லோ பகுதியில் வசித்துவருபவர் ஆல்வாரோ. 32 வயதான இவர் அந்தப் பகுதியில் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மரியா மாண்ட்செராட் எனும் 38 வயது பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பெண்மணிக்கு ஏற்கனவே நடைபெற்ற திருமணம் மூலமாக 12-23 வயதுடைய 5 மகள்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில் ஆல்வாரோ கடந்த ஜுன் 29 ஆம் தேதி தனது மனைவி மரியாவிற்கு கடுமையான போதைப் பொருளைக் கொடுத்துள்ளார். அதையடுத்து அவரை வெட்டிக்கொன்று, அவர் உடல்பாகங்களை பிளாஸ்டிக் பைகளில் வைத்து அடைத்துள்ளார். மேலும் தனது சொந்த மனைவியின் மூளையை தனியாக எடுத்துச் சமைத்து டாகோஸில் வைத்து சாப்பிட்டும் இருக்கிறார்.
இந்நிலையில் மரியாவின் தாய் தனது மகளைத் தேடிக்கொண்டு வீட்டிற்கு வந்த நிலையில், அவளை வெட்டி பிளாஸ்டிக் பைகளில் வைத்துள்ளேன் என ஆல்வாரோ கூறியதைக் கேட்டு அதிர்ந்து போயுள்ளார். இதையடுத்து பியூப்லோ வீட்டில் இருந்த ஆல்வாரோ கைது செய்யப்பட்ட நிலையில், தான் செய்த அனைத்தையுமே அவர் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அவருக்கு தவறான வழிபாட்டு நம்பிக்கை இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் இந்தக் கோரச்சம்பவம் குறித்து பேசிய இறந்த பெண்ணின் தயார், எனது பேத்திகளுக்கு ஆல்வாரோ பலமுறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மரியாதான் அவர்களைக் காப்பாற்றி வந்தார். மனைவி மீது எந்த கோபமும் இல்லாத நிலையில் அவர் ஏன் அப்படி செய்தார் என்று புரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கோரச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஆல்வாரோ பிசாசுகளை வழிபாடு செய்யும் நம்பிக்கை கொண்டவர். இதனால்தான் தனது சொந்த மனைவியைக் கொன்று அவரது மூளையைச் சாப்பிட்டு இருக்கிறார் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. மேலும் ஆல்வரோவை நரமாமிசம் சாப்பிடும் மனிதர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments