பிரபல நடிகை சுட்டுக்கொலை… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மெக்சிகோ நாட்டில் பிரபல நடிகையாக வலம்வந்த டானியா மெண்டோசா என்பவர் காரில் சென்றபோது மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார். மேலும் இந்தக் கொலைக்கான காரணம் எதுவும் தெரியாமல் போலீசார் திண்டாடி வருவதும் குறிப்பிடத்தக்கது.
மெக்சிகோவில் பெண்களுக்கு எதிரான கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு மட்டும் ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 10 பெண்கள் கொலைச் செய்யப்பட்டதாகப் புள்ளிவிவரக் கணக்கு குறிப்பிடுகிறது. இதில் கொலை சம்பவங்கள் அதிகமாகவும் பாலியல் ரீதியான கொலை மற்றும் இதரக் காரணங்கள் குறைவாகவும் இருக்கின்றன.
இந்நிலையில் 42 வயதான பிரபல நடிகை டானியா மெண்டோசா தனது 11 வயது மகனை அழைத்து வருவதற்காக கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி மோரேலோஸ் அடுத்த குர்னவானா பகுதியில் செயல்பட்டு வரும் கால்பந்து அகாடமிக்கு சென்றிருக்கிறார். அவர் தனது மகனுக்காக அகாடமி நிலையத்திற்கு வெளியே காத்திருந்தபோது இருசக்கர வாகனத்தில் 2 மர்மநபர்கள் வந்ததாகவும் அதில் ஒருவர் நடிகை டானியாவை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்துவரும் அந்நாட்டு போலீசார் நடிகையின் கொலைக்கு என்ன காரணம்? அந்த மர்மநபர்கள யார்? என்று விவரங்கள் எதுவும் தெரியமல் தவித்து வருகின்றனர்.
கடந்த 2005 ஆம் அண்டு வெளியான “மேரா ரெய்னா டெல் சார்’‘ எனும் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை டானியா. இதற்கு முன்பு கடந்த 2010 ஆம் ஆண்டு கார் சுத்தம் செய்யும் மெக்கானிக் ஷாப்பில் நின்றிருந்தபோது நடிகை டானியா மற்றும் அவரது கணவர், 6 மாதக் கைக்குழந்தை மூவரும் கடத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து தனக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருந்ததாக காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் பொதுவெளியில் நின்றிருந்த நடிகை டானியாவை மர்மநபர்கள் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் மெக்சிகோவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com