தமிழ் சினிமாவில் முதல்முறை: விஜய்யின் மாஸ்டர் குறித்த ஆச்சரிய தகவல்

  • IndiaGlitz, [Sunday,February 23 2020]

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இருவரும் இணைந்து நடித்து வரும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்த ஆச்சரியமான தகவல்கள் தினந்தோறும் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் கலை இயக்குனராக பணிபுரிந்து கொண்டிருக்கும் சதீஷ்குமார் பேட்டி ஒன்றில் கூறுகையில், ‘மாஸ்டர்’ படத்திற்காக சுமார் 15 செட்டுக்கள் போட்டதாகவும் அவற்றில் ஒன்று மெட்ரோ ரயில் நிலைய செட் என்றும் கூறினார். இதனையடுத்து தமிழ் சினிமாவில் மெட்ரோ ரயில் நிலையம் செட் போட்டு படமாக்கப்பட்ட முதல் படம் ‘மாஸ்டர்’ என்பது தெரிய வருகிறது.

விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

More News

'இந்தியன் 2' விபத்து: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து கொண்டிருந்தபோது

டொனால்ட் டிரெம்ப் லைக் செய்த பாகுபலி வீடியோ! உலகம் முழுவதும் வைரல்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நாளை இந்தியாவிற்கு வருகை தர இருக்கும் நிலையில் தம்மை பாகுபலி போல் சித்தரித்து இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றுக்கு அவர் லைக் செய்து உள்ளார் 

'மாஸ்டர்' அடுத்த சிங்கிள் ரிலீஸ் குறித்த தகவல்

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தளபதி விஜய்யின் ரசிகை என அறிமுகம் செய்து கொண்ட பிரபல நடிகை!

தளபதி விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்பது தெரிந்ததே. மேலும் தளபதி விஜய்யின் ரசிகர்களாக கோலிவுட்

'சில்லுக்கருப்பட்டி' இயக்குனருக்கு சிறப்பு பரிசு கொடுத்த ஜோதிகா!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான 'சில்லுக்கருப்பட்டி' என்ற திரைப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது.