கொரோனா தடுப்பூசியை இலவசமாக கொடுக்கும் முதல் நடிகர்! - சிரிஷுக்கு கிடைத்த பெருமை
Send us your feedback to audioarticles@vaarta.com
திரையுலகைச் சேர்ந்த பலர் கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த பொது மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்த போதிலும் முதல்முறையாக தமிழ் நடிகர் மெட்ரோ சிரிஷ், தடுப்பூசியை இலவசமாக வழங்கி உள்ளார்.
சென்னையில் நடத்தப்பட்ட முதல் முகாமில் 185 பேர்களுக்கும், இரண்டாவது முகாமில் 100 பேர்களுக்கும், மூன்றாவது முகாமில் 196 பேர்களுக்கும் அவர் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கி உள்ளார். அதுமட்டுமின்றி அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களையும் ஏழை எளிய மக்களுக்கு வழங்கி வருகிறார்.
கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் பல்வேறு நடிகர்கள் பல உதவிகளை செய்து வந்த போதிலும் முதல் முறையாக இலவசமாக தடுப்பூசியை பொதுமக்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் கொடுத்த நடிகர் என்ற பெருமை மெட்ரோ சிரிஷ் அவர்களுக்கு கிடைத்துள்ளது.
‘மெட்ரோ’ படத்தின் மூலம் அறிமுகமாகி ’ராஜா ரங்குஸ்கி’ என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்ற மெட்ரோ சிரிஷி, தமிழில் தற்போது ’பிஸ்தா’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டிவரும் அவரது செயலுக்கு திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments