என் மகன் அஜித் ரசிகர், இருந்தாலும் சும்மா விட மாட்டேன்: 'மெட்ரோ' தயாரிப்பாளர் ஆவேசம்
Send us your feedback to audioarticles@vaarta.com
என் மகன் தீவிர அஜீத் ரசிகராக இருந்தாலும் அஜித்தின் 'வலிமை’ படத்தை சும்மா விடமாட்டேன் என ‘மெட்ரோ’ படத்தின் தயாரிப்பாளர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
அஜித் நடித்த 'வலிமை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படம் தான் தயாரித்த ‘மெட்ரோ’ படத்தின் அப்பட்டமான காப்பி என அந்த படத்தின் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
'வலிமை’ படம் ரிலீசுக்கு முன்னர் இந்த படத்தின் கதை யாருக்கும் தெரியாதவாறு இருந்தது என்றும் இந்த படம் ரிலீஸ் ஆனவுடன் ‘மெட்ரோ’ இயக்குனருக்கு ஏகப்பட்ட மெசேஜ்கள் வந்ததாகவும், அந்த மெசேஜில் ‘மெட்ரோ’ படத்தை அப்படியே காப்பி அடித்து எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டிருந்ததாகவும், இந்த மெசேஜ்களை அவர் தனக்கு பார்வேர்ட் செய்ததாகவும் கூறியுள்ளார் .
அதன்பின்னர் அந்த படத்தை பார்த்தபோது ‘மெட்ரோ’ படத்தின் கதை அப்படியே இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் இதனை அடுத்து காபிரைட்ஸ் குறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் கூறினார் .
இந்த படத்தின் தயாரிப்பாளர் தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தால் அவரிடம் நேரடியாக பேச்சுவார்த்தை செய்து இருப்பேன் என்றும் ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் மும்பையை சேர்ந்தவர் என்பதால் நேரடியாக நீதிமன்றத்திற்கு சென்று இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார் .
மேலும் தனது மகன் அஜித்தின் தீவிர ரசிகர் என்றும் ஆனாலும் இந்த வழக்கை சும்மா விடமாட்டேன் என்று அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout