'மெட்ரோ' வில்லனாகும் 'மெட்ரோ' நாயகன்

  • IndiaGlitz, [Wednesday,June 29 2016]

கடந்த வெள்ளியன்று வெளியான 'மெட்ரோ' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. ஷ்ரிஷ் சரவணன் நாயகனாக நடித்த இந்த படத்தில் பாபிசிம்ஹா நெகட்டிவ் கேரக்டரில் அசத்தலாக நடித்திருந்தார். ஆனந்த கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியிருந்தார்.
இந்நிலையில் இந்த படத்தை சென்னையில் சமீபத்தில் பார்த்த பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் தெலுங்கில் இந்த படத்தை ரீமேக் செய்ய விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் ஷிரிஷ் சரவணன் நடித்த கேரக்டரில் நாகசைதன்யா நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் வில்லன் கேரக்டரில் ஷிரிஷ் சரவணன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ் 'மெட்ரோ' படத்தில் நாயகனாக நடித்தவர் தெலுங்கு 'மெட்ரோ'வில் வில்லனாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சமந்தா திருமணத்தை உறுதி செய்த நாகார்ஜூனா?

கோலிவுட், டோலிவுட்டின் பிரபல நடிகை சமந்தாவுக்கு விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக வெளிவந்த செய்தியை சற்று முன்னர் பார்த்தோம்...

அஜித், விஜய் இயக்குனரின் அடுத்த படத்தில் உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மனிதன்' திரைப்படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தை கவுரவ் நாராயணன் இயக்கவுள்ளதாகவும்...

நடிகர் பார்த்திபனுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்றது...

'சமுத்திரக்கனி'யின் 'அப்பா' திரைமுன்னோட்டம்

கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த 'சாட்டை' படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படும் சமுத்திரக்கனியின் 'அப்பா' திரைப்படம் வரும் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது...

நடிகை சமந்தாவுக்கு நிச்சயதார்த்தமா?

இந்த ஆண்டு வெளியான 'தெறி' மற்றும் '24' ஆகிய இரண்டு ஹிட் படங்களில் நடித்த நடிகை சமந்தா சமீபகாலமாக புதிய திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகவில்லை...