சவுதியின் மெகா ஆஃபரை ஒதுக்கிய மெஸ்ஸி… அடுத்து அமெரிக்க கிளப்பில் விளையாடுகிறாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி பாரிஸ் செயின் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணிக்காக விளையாடி வந்த நிலையில் அதிலிருந்து விலகிய பின்பு தற்போது அமெரிக்காவின் இண்டர் மியாமி கிளப்பில் இணைந்து விளையாட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
2022 ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் திறமையாக செயல்பட்ட லியோனல் மெஸ்ஸி அர்ஜெண்டினா அணிக்கு கோப்பையைப் பெற்றுத்தந்தார். இதையடுத்து கிளப் போட்டிகளுக்காக பார்சிலோனா அணிக்காக விளையாடிவந்த மெஸ்ஸி கடந்த 2 ஆண்டுகளாக பிஎஸ்ஜி கிளப்பிற்கு விளையாடினார். இந்நிலையில் அணியின் ஒப்புதலை பெறாமல் சவுதி சென்று வந்தார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அந்த அணியில் இருந்து விலகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து சவுதி அரேபியா லீக் போட்டிக்காக அவரை இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தன. ஏற்கனவே மற்றொரு வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ அரேபியா லீக் போட்டிக்காக அல் நாசர் கிளப்பில் இணைந்துள்ளார். இதைத் தொடர்ந்து அல் ஹிலால் கிளப்பில் லியோனல் மெஸ்ஸியை இணைத்துவிட்டால் போட்டி சூடு பிடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை விட சவுதி இளவரசர் முகமது பின் சல்மானும் மெஸ்ஸி அரேபியா லீக் போட்டிக்காக விளையாட வேண்டும் என்று விரும்பினார். இதனால் 1 பில்லியன் டாலர் வரைக்கும் அவருக்கு கொடுக்கப்பட இருந்தது.
இந்நிலையில் லியோனல் மெஸ்ஸி அரேபிய கிளப் அணியில் இணையாமல் அமெரிக்காவின் மேஜர் லீ சாக்கருக்காக இண்டர் மியாமி கிளப்பில் இணைந்து விளையாட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை ஐரோப்பிய அணிகளுக்காக மட்டுமே விளையாடி வந்த அவர் தற்போது முதல் முறையாக ஐரோப்பாவை விட்டு வெளியே நடக்கவிருக்கும் ஒரு போட்டியில் விளையாட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் மெஸ்ஸி மியாமி கிளப்பில் இணைந்து விளையாடுவதற்கு மற்றொரு காரணமும் முக்கியமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. காரணம் மியாமி கிளப்பின் உரிமையாளர் டேவிட் பெக்காம் மெஸ்ஸியின் சக வீரர் என்பதும் நண்பர் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. இந்நிலையில் சவுதி அரேபிய லீக் போட்டியை ஒதுக்கிவிட்டு தற்போது அமெரிக்காவின் மேஜர் லீ சாக்கருக்காக மெஸ்ஸி இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com