விபத்து ஏற்படுத்தியது யார்? யாஷிகாவின் விளக்கம்

  • IndiaGlitz, [Sunday,October 06 2019]

சென்னை நுங்கம்பாக்கம் அருகே நேற்றிரவு நடிகை யாஷிகாவின் சொகுசுக்கார் உணவு டெலிவரி செய்யும் தொழிலாளி ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானதாகவும், இந்த விபத்தில் காயம் அடைந்த அந்த ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இந்த காரில் யாஷிகாவின் நண்பர்கள் சென்ற நிலையில் யாஷிகா சென்றாரா? இல்லையா? என்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் இந்த விபத்து குறித்து யாஷிகா விளக்கம் அளித்துள்ளார். ‘உண்மையில் விபத்து நடந்த காரில் நான் செல்லவில்லை. நான் காரில் இருந்ததாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் பொய்யானவை. என்னுடைய நண்பர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானதாக தகவல் தெரிந்தவுடன் நான் வேறொரு காரில் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்த்தேன். இதனால் நான் அந்த காரில் இருந்ததாக பலர் பொய்யான தகவலை தெரிவித்து வருகின்றனர்.’ என்று யாஷிகா விளக்கம் அளித்துள்ளார்.

யாஷிகாவின் இந்த விளக்கத்தை அடுத்து அவர் காரில் செல்லவில்லை என்பதும், அவர் காரை ஓட்டவில்லை என்பதும் தெரிகிறது.

More News

தமிழ் நடிகைக்கு பவர்ஃபுல் பதவி கொடுத்த முதலைமைச்சர்: மாதச்சம்பளம் ரூ.4 லட்சம்

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் பிரபலமாக இருந்த தமிழ் நடிகை ரோஜாவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநில தொழில்துறை உள்கட்டமைப்பு கழக தலைவர் என்ற பதவியை

ரஜினிக்கு கட்சி ஆரம்பித்தவுடன் வாக்குச்சதவீதம் சுனாமி போல் ஆகிவிடும்: கராத்தே தியாகராஜன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் கட்சி ஆரம்பிப்பார்

வலுக்கும் எதிர்ப்புகள்: பிக்பாஸ் ஒளிபரப்பு நிறுத்தப்படுகிறதா?

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இறுதி நாள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது. இந்த சீசனின் வெற்றியாளர் யார்? என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பிக்பாஸ் டைட்டிலை முகின் வெல்ல ஒரே காரணம்!

பிக்பாஸ் சீசன் 3 வெற்றியாளர் முகின் என கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருகின்றன. சமூகவலைத்தளங்களிலும்,

மாதவன் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்!

கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த 'விக்ரம் வேதா' வெற்றி படத்திற்கு பின் மாதவன் தற்போது அனுஷ்காவுடன் நிசப்தம்' மற்றும் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'ராக்கெட்டரி'