அஜித்துடன் நடிக்கும் விஜய்யின் ரீல் மகன்: பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Tuesday,October 06 2020]

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான திரைப்படம் ’மெர்சல்’ என்பதும் இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் தளபதி கேரக்டரில் நடித்த விஜய்யின் மகனாக அதாவது சிறுவயது விஜய்யாக அக்சத் தாஸ் என்ற குழந்தை நட்சத்திரம் நடித்து இருப்பார். இவர் விஜய்யுடன் பல காட்சிகள் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த அக்சத் தாஸ் தான் விரைவில் அஜித்துடன் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார். அனேகமாக அவர் ’வலிமை’ படத்தில் ஒரு கேரக்டரில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இவர் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆனபோது விஜய் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.