'மெர்சல்' டைட்டில் வழக்கு. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Wednesday,October 04 2017]

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் 'மெர்சல்' டைட்டிலை பயன்படுத்தக்கூடாது என்று தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் 22ஆம் தேதி வந்தபோது அடுத்தகட்ட விசாரணை அக்டோபர் 3ம் தேதி நடைபெறும் என்றும் அதுவரை மெர்சல் என்ற தலைப்பில் படத்தை விளம்பரப்படுத்தக் கூடாது என ஐகோர்ட் தடை விதித்தது

இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இருதரப்பு வாதங்களை கேட்ட சென்னை ஐகோர்ட், இந்த வழக்கின் தீர்ப்பு வரும் வெள்ளியன்று வழங்கப்படும் என்றும் அதுவரை மெர்சல் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று அறிவித்தது.