4 மணி நேரத்தில் குவிந்த லைக்ஸ்கள்: உலக சாதனை செய்த மெர்சல்

  • IndiaGlitz, [Friday,September 22 2017]

உலகின் அதிக லைக்ஸ் பெற்ற ஹாலிவுட் திரைப்படமான 'ஸ்டார் வார்ஸ்' படத்தின் லைக்ஸ்களை சமீபத்தில் தல அஜித்தின் 'விவேகம்' டீசர் முறியடித்தது என்பது ஏற்கனவே தெரிந்ததே. இந்த நிலையில் இந்த சாதனையை தளபதி விஜய்யின் 'மெர்சல்' பட டீசர் வெறும் நான்கு மணி நேரத்தில் முறியடித்துள்ளது.

ஆம், நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகிய மெர்சல்' படத்தின் டீசருக்கு வினாடிக்கு வினாடி ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்த நிலையில் சரியாக இரவு பத்து மணி அளவில் இந்த டீசருக்கு 6 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்தது. இதன்மூலம் உலகின் அதிவேக, அதிகபட்ச லைக்ஸ்களை பெற்ற டீசர் என்ற பெருமையை இந்த டீசர் பெற்றுள்ளது

'மெர்சல் டீசர் 7.7 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ள சோனி நி'றுவனத்தின் யூடியூப் சேனலில் வெளியானதும், இந்த டீசரை விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட பல விவிஐபிகளின் சமூக வலைத்தளங்களின் புரமோஷன் செய்ததும், இரவு 12 மணிக்கு வெளியிடாமல் பிரைம் டைம் என்று கூறப்படும் மாலை 6 மணிக்கு வெளியிட்டதும், இவையெல்லாவற்றையும் விட கோடிக்கணக்கான விஜய் ரசிகர்களுமே இந்த சாதனை ஏற்படுத்த காரணம் என்று கூறப்படுகிறது

More News

தளபதி விஜய்யின் 'மெர்சல்': திரையுலக பிரபலங்களின் கருத்து

தளபதி விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களை கதிகலக்கி கொண்டிருக்கும் நிலையில் இந்த டீசர் குறித்து திரையுலக பிரபலங்கள் டுவிட்டரில் கூறியதை தற்போது பார்ப்போம்

தளபதி விஜய்யின் 'மெர்சல்' டீசர் விமர்சனம்

நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனை கேட்கும் நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும் என்ற அட்டகாசமான வசனத்துடன் ஆரம்பமாகும் 'மெர்சல்' பட டீசர் அட்டகாசமாக விஷூவல் விருந்தாக உள்ளது

ஊழலுக்கு எதிரானவர்கள் எனக்கு உறவினர்: அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்புக்கு பின்னர் கமல்

உலக நாயகன் கமல்ஹாசனை டெல்லி முதல்வர் சற்று முன்னர் அவருடைய வீட்டில் சந்தித்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

கமல் டிரம்ப்பை சந்தித்தாலும் எங்களுக்கு கவலை இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களை சந்தித்ததையே தமிழக அரசியல்வாதிகள் ஆச்சரியத்துடன் பார்த்த கதை தெரிந்ததே

கமல்ஹாசனை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

உலகநாயகன் கமல்ஹாசனை அவரது வீட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். அரவிந்த் கெஜ்ரிவாலை கமல்ஹாசன் பூங்கொத்து கொடுத்து புன்முறுவலுடன் வரவேற்றார்