மலைக்க வைக்கும் 'மெர்சல்' ரிலீஸ் திரையரங்குகளில் எண்ணிக்கை

  • IndiaGlitz, [Wednesday,October 11 2017]

இந்த ஆண்டு விஜய் ரசிகர்களுக்கு 'மெர்சல்' தீபாவளி என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படம் உலகின் பெரும்பாலான நாடுகளில் மிக அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் 'மெர்சல்' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் திரையரங்குகளின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

உலகம் முழுவதும் 'மெர்சல்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் சேர்த்து இதுவரை புக் ஆன எண்ணிக்கையின்படி 3292 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒருவாரம் உள்ள நிலையில் மேலும் சில திரையரங்குகள் புக் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் உலகம் முழுவதும் 6500 திரையரங்குகளிலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' திரைப்படம் உலகம் முழுவதும் 4000 திரையரங்குகளிலும் வெளியானதாக கூறப்பட்ட நிலையில் அந்த சாதனைகளை 'மெர்சல்' நெருங்குமா? என்பதை இன்னும் ஒரு வாரம் பொறுத்திருந்து பார்ப்போம்

More News

பஞ்சாயத்து தலைவர் கேரக்டர் படத்தில் எத்தனை நிமிடங்கள்? அட்லி

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் இந்த படத்தின் புதுப்புது செய்திகள் படத்தின் எதிர்பார்ப்பை உயர்த்தி கொண்டே வருகிறது.

மல்டிபிளக்ஸ் முதலாளிகளின் பிடிவாதத்தால் பேச்சுவார்த்தையில் சிக்கல்?

தமிழக அரசு திரைத்துறையினர்களுக்கு விதித்த 10% கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில்,

அழிக்க நெனச்சா ரெண்டா வருவானே! மெர்சலின் மேஜிக் பாடல் வரிகள்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் மேஜிக் கேரக்டருக்காக ஒரு போனஸ் பாடல் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அந்த பாடலின் இரண்டு வரிகளை பாடலாசிரியர் விவேக் ஏற்கனவே வெளியிட்ட செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்.

'மெர்சலுக்கு' முன் விஜய்-வடிவேலு கூட்டணியின் காமெடி படங்கள்

'மெர்சலுக்கு' முன் விஜய்-வடிவேலு கூட்டணியின் காமெடி படங்கள்

கேளிக்கை வரி முடிவு கிடைக்கும் வரை புதிய திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை: விஷால்

தமிழக அரசு திரைத்துறையினர்களுக்கு விதித்துள்ள கேளிக்கை வரி 10%ஐ நீக்கும் வரை புதிய திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை என சமீபத்தில் தமிழ் திரைப்படத்தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.