மலைக்க வைக்கும் 'மெர்சல்' ரிலீஸ் திரையரங்குகளில் எண்ணிக்கை

  • IndiaGlitz, [Wednesday,October 11 2017]

இந்த ஆண்டு விஜய் ரசிகர்களுக்கு 'மெர்சல்' தீபாவளி என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படம் உலகின் பெரும்பாலான நாடுகளில் மிக அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் 'மெர்சல்' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் திரையரங்குகளின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

உலகம் முழுவதும் 'மெர்சல்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் சேர்த்து இதுவரை புக் ஆன எண்ணிக்கையின்படி 3292 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒருவாரம் உள்ள நிலையில் மேலும் சில திரையரங்குகள் புக் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் உலகம் முழுவதும் 6500 திரையரங்குகளிலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' திரைப்படம் உலகம் முழுவதும் 4000 திரையரங்குகளிலும் வெளியானதாக கூறப்பட்ட நிலையில் அந்த சாதனைகளை 'மெர்சல்' நெருங்குமா? என்பதை இன்னும் ஒரு வாரம் பொறுத்திருந்து பார்ப்போம்