ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குறித்த படத்தில் 'மெர்சல்' பட வசனகர்த்தா

  • IndiaGlitz, [Friday,April 27 2018]

இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பு இருந்து செயல்பட்டு கொண்டிருக்கும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். பல்வேறு சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் சந்தித்து வரும் நிலையில் இந்த இயக்கம் குறித்த பிரமாண்டமான திரைப்படம் ஒன்று பாலிவுட்டில் தயாராகவுள்ளது.

ரூ.180 கோடி பட்ஜெட்டில் தயாராகவுள்ள இந்த படத்திற்கு 'பாகுபலி' , மெர்சல்' உள்பட பல படங்களுக்கு திரைக்கதை எழுதிய இயக்குனர் ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்காக விஜயேந்திரபிரசாத எழுதிய திரைக்கதையை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் படித்து பார்த்து ஓகே சொல்லிவிட்டதாகவும், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தி, தெலுங்கு என இருமொழிகளில் இந்த படம் தயாராகவுள்ளதாகவும் இந்த படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பே வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

More News

மே 4-ல் ரிலீஸ் ஆகும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஆர்யா

கடந்த ஆண்டு வெளியான 'கடம்பன்' படத்தை அடுத்து நடிகர் ஆர்யாவுக்கு வேறு படங்கள் வெளிவரவில்லை. அவர் நடிப்பதாக இருந்த 'சங்கமித்ரா' திரைப்படமும்

'இரவுக்கு ஆயிரம் கண்கள்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

அருள்நிதி நடித்து முடித்துள்ள அடுத்த படமான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' திரைப்படம் கோலிவுட் வேலைநிறுத்தம் தொடங்கும் முன்பே ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

வாழ்க்கையில் முன்னேற அட்ஜஸ்ட் அவசியம்: படுக்கை விவகாரம் குறித்து பாஜக எம்பி

கடந்த சில நாட்களாகவே ஸ்ரீரெட்டி உள்பட பல நடிகைகள் படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் குறித்து பரபரப்பான தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

'காலா' கண்ணாடியுடன் அமெரிக்காவில் வலம் வரும் ரஜினி: வைரலாகும் புகைப்படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு உடல்பரிசோதனை செய்வதற்காக சென்றார் என்பது தெரிந்ததே.

நான் அரசியலுக்கு வரப்போவதில்லை: ஆனால்...: அரவிந்தசாமி

அரவிந்தசாமி நடிப்பில் சித்திக் இயக்கிய 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் வரும் மே 11ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.