'தளபதி 66' படத்திலும் நடிக்கின்றேன்: பிரபல நடிகர் பகிர்ந்த புகைப்படம்

தளபதி விஜய் நடித்த சர்க்கார், மெர்சல், பிகில், பீஸ்ட் ஆகிய திரைப்படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்த நடிகர், ‘தளபதி 66’ படத்திலும் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவு செய்துள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில்ராஜூ தயாரிப்பில், தமன் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 66’. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ’தளபதி 66’ படத்தில் இணைந்து உள்ளதாக பிரபல காமெடி நடிகர் யோகிபாபு புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும், சரத்குமார், ஷாம் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 

More News

சூர்யா-பாலா படம் குறித்த முக்கிய தகவல்: ரசிகர்கள் குஷி!

சூர்யா நடிப்பில் தேசிய விருது பெற்ற பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 41' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில்

பாரதிராஜா மகனுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? வைரல் புகைப்படம்

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜாவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், மனோஜ் பாரதிராஜாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா?

டான்சிங் ரோஸ் ஷபீருடன் த்ரிஷா: வைரலாகும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

பா ரஞ்சித் இயக்கிய 'சார்பாட்டா பரம்பரை' படத்தில் டான்சிங் ரோஸ் என்ற கேரக்டரில் நடித்த ஷபீருடன் த்ரிஷா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது 

இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்: 'பீஸ்ட்' எப்போது தெரியுமா?

திரையரங்குகளில் ஒவ்வொரு வாரமும் மூன்று அல்லது நான்கு தமிழ் படங்கள் ரிலீசாகி வரும் நிலையில் அதே அளவிற்கு ஓடிடியிலும் புதிய படங்களும் ஏற்கனவே திரையரங்கில் ரிலீஸ் ஆன படங்களும்

கட்டண சேவையாகிறது டுவிட்டர்: எலான் மஸ்க் அறிவிப்பு!

உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து தொழிலதிபர் எலான் மஸ்க் சமீபத்தில் வாங்கிய நிலையில், டுவிட்டர் விரைவில் கட்டண சேவை ஆகும்