சென்னை கிரிக்கெட் மைதானத்தில் மெர்சலாக்கிய தல-தளபதி
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. நீண்ட நாட்களுக்கு பின்னர் சென்னையில் சர்வதேச ஒருநாள் போட்டி நடந்ததால் சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் மைதானத்தில் போட்டியை பார்க்க கூடியிருந்தனர். இந்த போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பெற்றது
இந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஸ்கோர் போர்டில் விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் போஸ்டர் திடீரென தோன்றியது. இந்த போஸ்டரை பார்த்ததும் மைதானத்தில் இருந்த விஜய் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்து கரகோஷம் எழுப்பினர். அந்த சமயத்தில் தல தோனி பேட்டிங் செய்து கொண்டிருந்தார். சென்னை மைதானத்தில் ஒரே நேரத்தில் திரையில் தளபதி விஜய்யும், மைதானத்தில் தல தோனியும் இருந்தது காணக்கிடைக்காத காட்சியாக கருதப்பட்டது.
'மெர்சல்' படத்தை தயாரித்து வரும் தேனாண்டாள் நிறுவனம் டுவிட்டரின் இமோஜி உள்பட வித்தியாசமான புரமோஷன்களை செய்து வரும் நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியின்போது 'மெர்சல் ஸ்டில்லை மைதானத்தில் விளம்பரம் செய்த புத்திசாலித்தனத்தை கோலிவுட் திரையுலகினர் பாராட்டி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com