சென்னை கிரிக்கெட் மைதானத்தில் மெர்சலாக்கிய தல-தளபதி

  • IndiaGlitz, [Monday,September 18 2017]

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. நீண்ட நாட்களுக்கு பின்னர் சென்னையில் சர்வதேச ஒருநாள் போட்டி நடந்ததால் சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் மைதானத்தில் போட்டியை பார்க்க கூடியிருந்தனர். இந்த போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பெற்றது

இந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஸ்கோர் போர்டில் விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் போஸ்டர் திடீரென தோன்றியது. இந்த போஸ்டரை பார்த்ததும் மைதானத்தில் இருந்த விஜய் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்து கரகோஷம் எழுப்பினர். அந்த சமயத்தில் தல தோனி பேட்டிங் செய்து கொண்டிருந்தார். சென்னை மைதானத்தில் ஒரே நேரத்தில் திரையில் தளபதி விஜய்யும், மைதானத்தில் தல தோனியும் இருந்தது காணக்கிடைக்காத காட்சியாக கருதப்பட்டது.

'மெர்சல்' படத்தை தயாரித்து வரும் தேனாண்டாள் நிறுவனம் டுவிட்டரின் இமோஜி உள்பட வித்தியாசமான புரமோஷன்களை செய்து வரும் நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியின்போது 'மெர்சல் ஸ்டில்லை மைதானத்தில் விளம்பரம் செய்த புத்திசாலித்தனத்தை கோலிவுட் திரையுலகினர் பாராட்டி வருகின்றனர்.

More News

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வரும் 25ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாகவும்,

பாட்டுப்பாடி, ஆட்டம் போடும் கமல் நாட்டை ஆள முடியுமா?  சுப்பிரமணியன் சுவாமி 

சுப்பிரமணியம் சுவாமி ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்து கண்டங்களை பெற்றுள்ள நிலையில்

கொரிய பேட்மின்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து 

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சற்றுமுன் நடந்த கொரியன் பேட்மிண்டன் தொடர் போட்டியின் சாம்பியன் பட்டம் வென்றார்

துப்பறிவாளனால் புத்துயிர் பெற்றதா ஆயிரத்தில் இருவர் ?

விஷால் நடித்த 'துப்பறிவாளன்' திரைப்படத்தில் வில்லனாக நடித்த வினய் நடித்து நீண்ட நாள் கிடப்பில் இருந்த 'ஆயிரத்தில் இருவர்' திரைப்படம் புத்துயிர் பெற்றுள்ளது

இந்தியா-பாகிஸ்தான் போர் நாயகன் அர்ஜன்சிங் காலமானார்

இந்திய விமானப்படையின் தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவரும்,  இந்திய விமானப்படையில் 5 நட்சத்திரம் பெற்ற ஒரே விமானப்படை தளபதியுமான அர்ஜன் சிங் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 98