'மெர்சல்' படத்தின் மெலடி பாடல் 'நீதானே' டீசர் எப்படி?

  • IndiaGlitz, [Thursday,August 17 2017]

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் மெலடி பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளிவரவுள்ளது என்பதும், இந்த பாடலின் டீசர் 12 மணிக்கு வெளியாகவுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் 'நீதானே' பாடலின் டீசர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மெலடி கிங் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் மெலடி டியூனில் விவேக் எழுதிய கவிதை வரிகளை ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோர் மனதை உருக்கும் வகையில் பாடியுள்ளனர். டீசரே இந்த அளவுக்கு இருக்கும் நிலையில் முழு பாடல் மனதை கிறங்கடிக்கும் என்பது உண்மை. இந்த டீசரில் உள்ள விவேக்கின் வைர வரிகள் இதோ:

நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம்

அழகாய் உடைந்தேன்

என் மாலை வானம் மொத்தம்

இருள் பூசிக்கொள்ளும் சத்தம்

இங்கு நீயும் நானும் மட்டும்

இது கவிதையோ! நீதானே