ஜூன் மாதத்தில் அதிக வசூல் செய்த படம் 'மெர்சல்': ஒரு ஆச்சரிய தகவல்

  • IndiaGlitz, [Tuesday,July 02 2019]

சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கம் ஒன்றில் கடந்த மாதம் அதாவது ஜூன் மாதம் மொத்தம் 19 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இவற்றில் 11 திரைப்படங்கள் பெரிய ஸ்க்ரீனில் திரையிடப்பட்டன. இந்த படங்களில் இரண்டு படங்கள் மட்டுமே ஹவுஸ்புல் காட்சிகளாக ரசிகர்களால் நிரம்பியுள்ளது. அவற்றில் ஒன்றுதான் கடந்த ஜூன் 22ஆம் தேதி தளபதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு திரையிடப்பட்ட 'மெர்சல்' திரைப்படம் ஆகும்.

மெர்சல் திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியானபோதிலும் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மீண்டும் திரையிடப்பட்டது. அப்படி திரையிடப்பட்ட படம் தான் ஜூன் மாத வசூலில் சாதனை புரிந்துள்ளது என்பது ஆச்சரியத்தக்க ஒன்றாக கருதப்படுகிறது.

ஜூன் மாதத்தில் வெளியாகி ஹவுஸ்புல் ஆன இன்னொரு திரைப்படம் 'கொலைகாரன்' என அந்த தியேட்டர் உரிமையாளர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

லைகா நிறுவனத்தின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

தமிழ் சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனம் தற்போது ரஜினியின் 'தர்பார்', கமல்ஹாசனின் 'இந்தியன் 2', சிவகார்த்திகேயனின் 17வது படம்

இன்று நேற்று நாளை 2' படத்தின் நாயகன் அறிவிப்பு

இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிப்படமான 'இன்று நேற்று நாளை' திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நாயகனாகவும் மியா நாயகியாகவும்  நடித்திருந்தனர்.

ரியல் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ரீல் மன்மோகன்சிங்!

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படமான 'தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்' என்ற திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் தமிழ் உள்பட

இயக்குனர் சங்க தேர்தல் தேதி மாற்றம்: புதிய தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட இயக்குனர் பாரதிராஜா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில் புதிய தலைவரை

வரலட்சுமி கூட்டணியில் மிஸ் ஆன த்ரிஷா!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியை