பாரீஸ் திரையரங்கில் 'மெர்சல்' திரைப்படத்தின் திடீர் மாற்றம்

  • IndiaGlitz, [Friday,October 13 2017]

தளபதி விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் சுமார் 3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருக்கும் நிலையில் விஜய் ரசிகர்கள் டபுள் தீபாவளி கொண்டாட தயாராகி உள்ளனர்.

இந்த நிலையில் இந்த படம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் திரையிடவுள்ளதாகவும், கபாலி, பாகுபலி 2 படத்திற்கு பின்னர் திரையிடப்படும் தென்னிந்திய திரைப்படம் 'மெர்சல்' என்பதும் ஏற்கனவே நாம் பார்த்ததே

இந்த நிலையில் 'மெர்சல்' திரைப்படத்தின் டிக்கெட் மிக வேகமாக இந்த திரையரங்கில் புக் ஆகியதை தொடர்ந்து தற்போது இந்த படம் பெரிய ஸ்க்ரீனுக்கு மாற்றப்பட்டது. இதுகுறித்து கிராண்ட்பிரிக்ஸ் திரையரங்கின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 'மெர்சல் படத்திற்கு அதிக டிக்கெட்டுக்கள் புக் ஆகியுள்ளதை தொடர்ந்து பெரிய திரைக்கு மாற்றப்பட்டுள்ளது. அக்டோபர் 17ஆம் தேதி பாரீஸ் நேரப்படி இரவு 11.55க்கு 'மெர்சல் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பாரீஸ் நகரில் உள்ள விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.