'மெர்சல்' தயாரிப்பாளர் மீது மேஜிக்மேன் போடும் வழக்கு
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தில் மேஜிக்மேனாக நடித்த விஜய் கேரக்டருக்கு பயிற்சி கொடுத்த மேஜிக்மேன் ராமன் ஷர்மா, சென்னை ஐகோர்ட்டில் தேனாண்டாள் பிலிம்ஸ் மீது வழக்கு தொடர்கிறார்.
'மெர்சல்' படத்திற்காக விஜய்க்கு மேஜிக் தந்திரங்கள் குறித்த பயிற்சி அளித்த தனக்கு தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனக்கு இன்னும் ரூ.4 லட்சம் சம்பள பாக்கி வைத்திருப்பதாகவும், பலமுறை அந்த பணத்தை கேட்டும் தயாரிப்பு தரப்பில் இருந்து பதில் வராததால் கடந்த ஏப்ரல் மாதம் கனடாவில் இருந்து சென்னைக்கு வந்து வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய தயாராகியிருப்பதாகவும் மேஜிக்மேன் ராமன் ஷர்மா வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.
மேலும் சென்னை வந்திருந்தபோது 'பிகில்' படப்பிடிப்பில் இருந்த விஜய், அட்லி ஆகியோர்களை ராமன் ஷர்மா சந்தித்ததாகவும், ஆனால் தனது சம்பள பாக்கி குறித்து அவர்களிடம் அவர் பேசவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் மெர்சல்' படத்தில் பணிபுரிந்த ஒருசில கலைஞர்களை தான் சந்தித்தபோது அவர்களுக்கும் சம்பள பாக்கி இருந்ததை தான் அறிந்து கொண்டதாகவும் ராமன்ஷர்மா கூறியுள்ளார். மேலும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் பொருளாதார சிக்கலில் இருப்பதாக கூறுவதை தான் நம்பவில்லை என்றும் சமீபத்தில் கூட ஹேமா ருக்மணி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு மிகப்பெரிய ஷோரூமில் பர்சேஸ் செய்த புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளதாகவும், எனவே தான் கஷ்டப்பட்டு பணிபுரிந்ததற்கான சம்பளத்தை பெறாமல் விடப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
@ThenandalFilms law suit!! #stillnotpaid #fraud #madrashighcourt @ChennaiTimesTOI @IndiaToday @News18TamilNadu @newsminute @igtamil @news7tamil @VishalKOfficial @tamilfilms_offl @chennaitodaynew @StarCinema pic.twitter.com/kX4qYfT833
— Raman Sharma Magic (@RamanMagic) August 30, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com