விஜய் ஒரு அற்புதமான மேஜிக்மேன்: மெர்சல் மேஜிக்மேன் கருத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தில் அவர் இதுவரை ஏற்காத மேஜிக்மேன் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. மற்ற கேரக்டரில் நடிப்பதற்கும் மேஜிக்மேன் கேரக்டரில் நடிப்பதற்கும் மிகுந்த வித்தியாசம் உள்ளது. மேஜிக்மேன் கேரக்டரில் நடிக்கும்போது சிறு தவறு செய்தாலும் அந்த கேரக்டர் கேலிக்குரியதாகிவிடும் அபாயம் உள்ளது.
எனவே தான் விஜய், உண்மையான மேஜிக்மேனிடம் இரண்டு மாதங்கள் முறையாக மேஜிக் பயிற்சி பெற்று அதன் பின்னர் இந்த கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு மேஜிக் பயிற்சி கொடுத்துவரும் கோகோ ரெக்யூயம் (Gogo Requiem) என்பவர் விஜய்யின் மேஜிக் காட்சிகள் குறித்து கூறியபோது, 'விஜய்யின் நடிப்பு நம்ப முடியாத வகையில் இருக்கும் என்பதற்கும், அவர் ஒரு அற்புதமான மேஜிக்மேன் என்பதற்கும் நான் உத்திரவாதம் தருகிறேன்' என்று கூறியுள்ளார். ஒரு நிஜ மேஜிக்மேன் பாராட்டும் அளவுக்கு விஜய்யின் நடிப்பு இருப்பதாக கூறப்படுவதால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து தீபாவளி அன்று காத்திருப்பதாகவே கருதப்படுகிறது.
Thank you so much!!!#mersal #@actorvijay pic.twitter.com/3DpgSQn7Nx
— Gogo Requiem (@GogoRequiem) August 29, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments