மெர்சலில் 'மெர்சல்' காட்டிய ஜூனியர் வடிவேலு
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் வைகைப்புயல் வடிவேலு ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் விஜய்யுடன் இணைந்து நடிக்கின்றார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பஞ்சாயத்து தலைவர் விஜய் கேரக்டரின்போது ஜூனியர் வடிவேலு கேரக்டரில் நடித்துள்ளார் 10வது வகுப்பு படிக்கும் ராஜமாணிக்கம் என்ற மாணவர். இவர் விஜய்யுடன் நடித்து மெர்சலான அனுபவம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்துள்ளார்
ராசிபுரம் அருகே சின்ன கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம், 'மெர்சல்' படத்தில் வடிவேலுவின் சிறுவயது கேரக்டரில் நடிக்க ஆள் தேவை என்ற செய்தி அறிந்து ஆடிசனில் கலந்து கொண்டுள்ளார். வடிவேலுவின் சிறுவயது தோற்றம் அப்படியே இருக்க, இவரை பார்த்தவுடன் அட்லி தேர்வு செய்துவிட்டாராம்
விஜய்யின் தீவிர ரசிகரான ராஜமாணிக்கம், முதல் நாளிலேயே விஜய்யுடன் நடித்துள்ளார். ராஜஸ்தான், சென்னை என விஜய்யுடன் ஐம்பது நாட்கள் நடித்த ஜூனியர் வடிவேலு, விஜய்யும் அட்லியும் தனது நடிப்பை பாராட்டியதாகவும், இருப்பினும் இது படிக்க வேண்டிய காலம், எனவே படிப்பில் கவனம் செலுத்து என்று அறிவுரை கூறியதாகவும் பேட்டியில் கூறியுள்ளார்.
தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசையிருந்தாலும் நன்றாக படித்து டாக்டர் ஆக வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று கூறிய ராஜமாணிக்கம் தொடர்ந்து படிப்பில் தீவிர கவனம் செலுத்தவுள்ளதாக கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com