மெர்சலின் சென்னை வசூல்: ரூ.10 கோடி கிளப்பில் இணைந்தது

  • IndiaGlitz, [Monday,October 30 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் ஏற்கனவே நல்ல ஓப்பனிங் வசூலை கொடுத்த நிலையில் பாஜக தலைவர்களின் புண்ணியத்தில் 2வது வாரத்திலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. உலகம் முழுவதும் திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகிஸ்தர்களுக்கும் லாபத்தை கொடுக்க ஆரம்பித்துவிட்ட இந்த படத்தின் கடந்த வாரயிறுதி சென்னை வசூல் குறித்து தற்போது பார்ப்போம்

கடந்த வாரயிறுதி நாட்களில் அதாவது அக்டோபர் 27-29 வரையிலான நாட்களில் மெர்சல் திரைப்படம் சென்னையில் 20 திரையரங்குகளில் 442 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,65,05,640 வசூலாகியுள்ளது. மேலும் 2வது வாரத்திலும் திரையரங்குகளில் 70% பார்வையாளர்கள் நிரம்பியிருந்தது இந்த படம் சூப்பர் ஹிட் என்பதை நிரூபித்துள்ளது.

மேலும் இந்த படம் ரிலீஸ் ஆன கடந்த 18ஆம் தேதியில் இருந்து 29ஆம் தேதி வரை ரூ.10,88,43,468 வசூலை பெற்று சாதனை செய்துள்ளது. இதற்கு முன்னர் ரு.10 கோடிக்கும் சென்னையில் வசூல் செய்த படங்களான 'பாகுபலி 2', 'கபாலி', 'விவேகம்' படங்களுடன் தற்போது 'மெர்சல்' படமும் இணைந்துள்ளது.

More News

இந்திய பிரதமர் மோடியா? மன்மோகன் சிங்கா? அமைச்சரின் உளறல்

கடந்த சில மாதங்களாகவே அதிமுக அமைச்சர்கள் வாய்தவறி உளறிவருவது தொடர்கதையாகி வருகிறது.

ஹார்வர்டு பல்கலை தமிழ் இருக்கைக்கு விஷால் செய்த உதவி

உலகில் உள்ள ஏழு செம்மொழிகளில் தமிழுக்கு மட்டுமே ஹார்வர்டு பல்கலையில் இருக்கை இல்லை என்பது உலக தமிழர்களின் குறையாக இருந்த நிலையில் தற்போது இந்த இருக்கையை பெற உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆர்வலர்கள்

ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை: ஏ.ஆர்.ரஹ்மான் செய்த மகத்தான உதவி

உலகின் ஏழு செம்மொழிகளில் ஒன்றான தமிழுக்கு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கை பெற உலகெங்கும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

கமலின் எண்ணூர் விசிட் ஏற்படுத்திய திடீர் மாற்றம்

கடந்த சில வருடங்களாக எண்ணூர் வல்லூர் மின் நிலையமும், வடசென்னை மின் நிலையமும் தங்கள் சாம்பல் கழிவுகளை கொசஸ்தலை ஆற்றில் கொட்டுவதை எதிர்த்து

நிக்கி கல்ராணியை தாசில்தாராக மாற்றிய இயக்குனர்

தமிழ் திரையுலகில் வேகமாக முன்னேறி வரும் நடிகைகளில் ஒருவர் நிக்கி கல்ராணி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'ஹர ஹர மகாதேவி' பெரிய பட்ஜெட் படங்களுக்கு இணையான வசூலை கொடுத்தது.