7 நாடுகளின் படங்களை பின்னுக்கு தள்ளிய தளபதியின் 'மெர்சல்'

  • IndiaGlitz, [Friday,March 30 2018]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கிய 'மெர்சல்' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியானது. இந்த படம் உலகம் முழுவதும் பெருவாரியான வசூலை குவித்து சாதனை செய்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் விருதுகளையும் குவிக்க தொடங்கிவிட்டது.

நேற்று நடைபெற்ற பிரிட்டனின் 4வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் 'மெர்சல்' திரைப்படத்திற்கு சிறந்த வெளிநாட்டு மொழி படப் பிரிவில் விருது கிடைத்துள்ளது. இந்த விருதுக்காக பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி, ஸ்வீடன், சிலி, தென்னாப்பிரிக்கா, லெபனான், ஆகிய ஏழு நாடுகளின் படங்களுடன் இந்தியாவில் இருந்து சென்ற மெர்சலும் மோதியது.

ஆன்லைன் வாக்குகளின் அடிப்படையில் ஏழு நாடுகளின் படங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு மெர்சல், சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து 'மெர்சல்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சி.இ.ஓ ஹேமாருக்மணி தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். 

மேலும் விஜய்க்கும் படக்குழுவினர்களுக்கும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.