வெளிநாடுகளில் பட்டையை கிளப்பும் மெர்சல்' வசூல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று திரைக்கு வந்து சூப்பர் ஹிட் ஆகியுள்ளது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் வசூல் 100 கோடி ரூபாய் என்ற மைல்கல்லை தாண்டி தற்போது வெளிநாட்டில் கிடைக்கும் அபார வசூல் காரணமாக ரூ.200 கோடி என்ற சாதனையையும் தொட்டுவிட்டது
இதுவரை வெளிநாடுகளில் அமிர்கானின் 'டங்கல்', ஷாருக்கானின் 'ராயிஸ்' மற்றும் ராஜமெளலியின் 'பாகுபலி 2; ஆகிய படங்கள் மட்டுமே 10 மில்லியன் டாலர்களுக்கும் மேல் வசூல் செய்துள்ளன. அந்த வகையில் விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் வெளிநாடுகளில் 11.1 மில்லியன் டாலர் வசூல் செய்து இந்த பட்டியலில் இணைந்துள்ளது. வெளிநாடுகளில் 10 மில்லியனுக்கும் மேல் வசூல் செய்த முதல் நேரடி தமிழ்ப்படம் 'மெர்சல்' மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் படங்களை பொருத்தவரையில் இதுவரை அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை ரஜினியின் 'எந்திரன்' படம் வைத்துள்ளது. இந்த நிலையில் விஜய்யின் மெர்சல்', ரஜினியின் எந்திரன் சாதனையை இன்னும் ஒருசில நாட்களில் முறியடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் 'மெர்சல்' படத்தின் வசூல் மெர்சலாகியுள்ளது. அமெரிக்காவில் மட்டுமே இந்த படம் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. அமெரிக்கா உள்பட பல நாடுகளில் எந்திரன் படத்தின் வசூலை மெர்சல் நெருங்கி வருவதாகவும் ஒருசில நாடுகளில் எந்திரன் படத்தின் வசூலை முறியடித்துவிட்டதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன
பிரிட்டன், சிங்கப்பூர், இலங்கை, நியூசிலாந்து, நார்வே ஆகிய நாடுகளில் இதுவரை எந்த தமிழ்ப்படமும் வசூல் செய்யாத சாதனை வசூலை மெர்சல் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com