மெர்சல் சென்சார் சான்றிதழ் திரும்ப பெறப்படுமா? நாளை நீதிமன்றத்தில் விசாரணை
- IndiaGlitz, [Thursday,October 26 2017]
தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் மத்திய அரசின் திட்டங்களான ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த வசனங்களுக்கு தமிழக பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் 'மெர்சல்' படக்குழுவினர்களுக்கும், விஜய்க்கும் ஆதரவாக ராகுல்காந்தி உள்பட இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களும், ஒட்டுமொத்த திரையுலகமும் ஆதரவு கொடுத்ததால் பாஜக தலைவர்கள் பின்வாங்கினர்.
இந்த நிலையில் 'மெர்சல்' படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை அனுமதித்த தணிக்கை அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதனையடுத்து அஸ்வத்தாமன் என்ற வழக்கறிஞர் 'மெர்சல்' படத்திற்கு தரப்பட்ட தணிக்கை சான்றிதழை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. நாளைய விசாரணையின்போதுதான் இந்த படத்தின் தணிக்கை சான்றிதழ் திரும்ப பெறப்படுமா? அல்லது மனு தள்ளுபடி செய்யப்படுமா? என்பது தெரியவரும்