விஜய்சேதுபதி அலுவலகத்தை முற்றுகையிட வணிகர்கள் திட்டம்: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Friday,November 01 2019]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக வணிகர் சங்க அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் வணிகம் அதிகரித்து வருவதால் சிறுகுறு வியாபாரிகள் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தீபாவளியின் போது கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஆன்லைன் நிறுவனங்கள் விற்பனை செய்ததால் கடைகள் வைத்து வணிகம் செய்பவர்களின் வியாபாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சென்னை தி.நகர் உள்ளிட்ட இடங்களில் தீபாவளிக்கு உடை உள்ளிட்ட பொருட்கள் வாங்க இந்த ஆண்டு குறைவாகவே வாடிக்கையாளர்கள் வந்தனர். இதனை அடுத்து ஆன்லைன் வணிகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று வணிகர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

இந்த நிலையில் தனியார் ஆன்லைன் நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இதற்கு தமிழ்நாடு வணிகர் அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வணிகர் சங்க அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ’சிறுகுறு வியாபாரிகளை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்திற்கு பணம் வாங்கி கொண்டு துணை போகும் நடிகர் விஜய் சேதுபதியை கண்டிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 4-ம் தேதி காலை 10 மணியளவில் விருகம்பாக்கத்தில் உள்ள விஜய்சேதுபதி அலுவலகத்தை வணிக போராளி கொளத்தூர் த.ரவி அவர்களின் தலைமையில் முற்றுகையிடப்போவதாகவும் அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

More News

சிவாஜி பட டைட்டில், ரஜினியின் ஆதரவு: மீண்டும் களத்தில் ஏவிஎம்

இந்தியாவின் பழம்பெரும் திரைப்பட நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்கள் தயாரிக்காத நிலையில் தற்போது ஏவிஎம் நிறுவனத்தின் வாரிசு நடிக்கும் படம் ஒன்று தயாராகிறது

தடைகளை வென்று சென்சார் சான்றிதழ் பெற்ற ராஜூமுருகனின் திரைப்படம்

கோலிவுட் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய ஜீவா நடிப்பில் இயக்குனரும் எழுத்தாளருமான ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகிய 'ஜிப்ஸி'

ரஜினி கட்சி மூன்றாவது இடத்தையே பிடிக்கும்: பிரபல அரசியல் கட்சியின் தலைவர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசியல் கட்சியை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சரிதா நாயரின் தண்டனை திடீர் நிறுத்தி வைப்பு!

பிரபல மலையாள நடிகையும் தொழிலதிபருமான சரிதா நாயருக்கு கோவை நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு இருந்த நிலையில்

லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்திலும் மாஸ் நடிகர்?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கைதி' திரைப்படம் தீபாவளி திருநாளில் விஜய்யின் பிகில் என்ற பெரிய பட்ஜெட் படத்துடன் வெளியான போதிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றது.